Recent Posts

September, 2021

  • 30 September

    அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் – லெப். கேணல் சித்தார்த்தன்.!

    மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் ...

    Read More »
  • 30 September

    இஸ்லாமியத் தமிழ் மாவீரன் லெப் கேணல் மாறன்/குன்றத்தேவன்

    1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவனாக வந்த மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன் .அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து .மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.அங்கு சில காலம் களமுனையில் நின்றவன் .தொடர்ந்து கடற்புலிகளின் தரைத் தாக்குதலனியான சூட்டி படையணி வடமராட்சிக் கிழக்கு களமுனைக்கு அனுப்பப்பட்டபோது இவனும் ...

    Read More »
  • 30 September

    எருக்கலம்பிட்டியில் வீரவரலாறாகிய கடற்புலி மேஜர் சீர்மாறன்.

    11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” ...

    Read More »
  • 22 September

    நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மேஜர் கமல்

    அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா? சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து ...

    Read More »
  • 22 September

    கடமையுணர்வுகொண்ட கப்டன் கலைஞன்

    யாழ்மாவட்டத்தில் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப் படிப்பபை உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச் செயற்படலானார். 2005-ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிது காலம் திருமலை மாவட்டத்தில் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்கு வந்தார். வன்னிக்கு வந்த கலைஞன் ...

    Read More »