Breaking News
Home / மாவீரர்கள்

மாவீரர்கள்

கிழக்கில் அரசியல் துறை செயலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் வீரச்சாவடைந்த 8 மாவீரர்கள்

  சிறிலாங்க வான்படையால் மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை 29, 2006 நடத்தப்பட்ட கிபீர் வான் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன், கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் திருவுருவப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.  

Read More »

இறுதிக்களத்தில் வீரச்சாவடைந்த 3 சகோதரர்கள் – மாவீரர் ரஞ்சன், குயிலன், அருள்தேவன்

லெப் கேணல் ரஞ்சன் 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதிப்போர் வரை களமாடிய ஓர் மூத்த போராளி ஆவார். ஆகாய கடல் வெளி நடவடிக்கை, தவளைப் பாச்சல் நடவடிக்கை, வெற்றியுறுதி எதிர்ச்சமர், ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என தமிழீழத்தின் புகழ்பூத்த பல்வேறு சமர்க்களங்களில் தன் தடம் பதித்து திறமையாக களமாடியவர். லெப் கேணல் குணா அவர்களின் சிறந்த நண்பனுங்கூட. இவர் முள்ளிவாய்க்காலில் 07.04.2009 அன்று லெப் கேணல் ...

Read More »

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல்துறை நிபுணன் லெப். கேணல் தென்னரசன்

மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். ...

Read More »

இரு பெரும் சகோதர தளபதிகள் லெப். கேணல் மதன் மற்றும் லெப். கேணல் நளன்

வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில் ...

Read More »

லெப்.கேணல் நிலானி / தர்மா 

லெப்.கேணல் நிலானி/தர்மா செல்லையா இலங்கேஸ்வரி தமிழீழம்:யாழ் மாவட்டம்  தாயக மடியில்: 08.06.2008 சோதியா படையணியின் தாக்குதல் தளபதி  மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. சிங்கள படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த சிங்கள  படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் ...

Read More »

லெப்.கேணல் நாகதேவன் வீர வரலாற்று நினைவுகள்

பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ் மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் ...

Read More »

லெப்ரினன்ற் கேணல் புதியவன் மாஸ்டர்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம். யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் ...

Read More »

லெப்ரினன்ற் கேணல் பூவேந்தன்

1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு வேணாவில் அமைந்திருந்த புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் முகாமிலிருந்த போராளிகள் இரவு பகலாக தொடர்ந்து படைக்கலங்களை இறக்கி களஞ்சியப்படுத்தி கொண்டுயிருந்தனர். அந்நேரம் கடற்புலிகள் தங்களின் தாக்குதல் பலத்தால் சிங்கள கடற்படையை மீறி சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆயுதங்கள் அவற்றுக்கான செல்கள் ரவைகள் மற்றும் போராளிகளுக்கு தேவையான உலர்உணவுகள் உடைகள் அனைத்தையும் ...

Read More »

லெப்.கேணல் ஞானழகன்

01/04/1995 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் தமிழீழ இலட்சியத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து மட்டக்களப்பிலிருந்து 18/04/1995 யாழ்மாவட்டம் எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்திருந்த கப்டன் ஜெயந்தன் படையணி முகாமிற்கு வந்து சேருகிறான். அதன்பின் 28/05/1995 தொடக்கம் 28/10/1995 வரை லெப்.கேணல் பொன்னம்மான் ஆரம்ப பயிற்சி 06 தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்கிறான். பயிற்சியில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டதால் சிறுத்தை படையணியிற்கு உள்வாங்கப்பட்டு சிறுத்தை விசேட ...

Read More »

போரிற்கு தனது மகளை வழியனுப்பும் ஈழத்து தகப்பன் – இன்றும் சாட்சியாய்!

இன்று எனது அக்கா வீரச்சாவு அடைந்த நாள் 26/04/2009 எனது அக்கா வீரச்சாவடைந்தது பற்றி எனது நினைவில் பின்நேர பொழுது நான் அம்மாவும் முள்ளிவாய்களில் எமது இருப்பிடத்தில் இருக்கையில் அப்பா திருமாஸ்டர் ,திருமாஸ்டரின் மனைவி (டீச்சரும்) பதட்டமான வருகை என்னப்பா என்ன நடந்தது என்று அம்மா கேக்க அக்காவின் வீரச்சாவு செய்தியை எடுத்து வந்தனர் அனைவரும் எங்கள் குடும்பத்தில் இரண்டாவது இழப்பு 07.04.2009 அன்று எனது அண்ணா எறிகணை தாக்குதலில் ...

Read More »