மறைமுக கரும்புலிகள்

இவர்கள் யார்? உங்களுக்காக தங்களை மறைத்தவர்கள்.

இதுவரை எதிரிகள் கூட அறியாததை இனி நமது மக்கள் அறியட்டும்.

தமிழினத்தின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த பல்லாயிரம் வேங்கைகள் இருக்கின்றனர். ஈழப் போர் தோல்வியுறும் வரையில் அந்தப் பரித்தியாகிகளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் முகங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தங்களுக்காக வீழ்ந்தவர்களை மக்கள் அறிந்து கொண்டனர். வணங்கினர். ஆனால் இரகசிய நடவடிக்கைகளின் போது தங்களை தியாகம் செய்த நூற்றுக் கணக்கான போராளிகள் இன்றும் முகமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

ஈழப் போர் பல்லாயிரக்கானவர்களின் சரணடைவுடன் முற்றுப்பெற்றது .இந்தக் காலத்தில் என்ன நடந்தது? சொல்லும் உரித்துள்ளவர்கள் பலர் உயிருடன் இல்லை. விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே எஞ்சியிருக்கின்றனர். அவர்களுக்கும் கூட அனைத்தும் தெரியுமென்றும் இல்லை.

சம்பவங்கள் நிகழ்ந்து நெடும் காலமாகிவிட்டது – விடயங்களை கையாண்டவர்கள் – நடவடிக்கையின் போதான அபரிமிதமான அர்பணிப்பு – நடவடிக்கைக்கான முற்சிகள், இடையில் ஏற்பட்ட தவறுகள் – இடையூறுகள், தோல்விகள், வெற்றிகள் – என்று, முழுமையான வரலாறு தெரிந்தவர்கள் எவரும் உயிரோடு இல்லை. அன்றைய சூழலில் பாதுகாக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே அவர்களின் தியாகத்தைச் சொல்வதற்கான சான்றாக மிஞ்சியிருக்கின்றது.

ஒரு சில விடயங்களை சொல்வதற்கும் சிலர் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். அவர்களும் இல்லாமல் போனால் தமிழ் மக்களின் விடுதலைக்காக இருளில் வாழ்ந்து, மறைந்து போனவர்களில் முகங்கள் ஒரு போதும் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடும். அவ்வாறு நிகழ அனுமதித்தால், அது அவர்களுக்கு செய்யும் அநீதியாகும்.
உதாரணமாக கட்டுநாயக்கா தாக்குதல் நடவடிக்கை ஒரு சிறப்பு தாக்குதல் நடவடிக்கையாகவே இருந்தது – எனினும், அதன் இராணுவ அரசியல்ரீதியான வெற்றி கருதி பொது வெளிகளில் வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஒலிப் பேழை பாடல் தொகுதி ஒன்றும் வெளியிடப்பட்டது.

போராளிகள் மத்தியில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரது பெயர்கள் தெரிந்திருந்தது ஆனால் இயக்கம், இயங்கும் வரையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உரிமை கோரியிருக்கவில்லை. இன்று இதனுடன் தொடர்புபட்ட எவரும் உயிருடன் இல்லை.

இதே போன்று, 1992ம் ஆண்டு, சிறப்பு நடவடிக்கை கரும்புலி நாள் என்னும் நிகழ்வு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆவணி மாதம் 19ம் திகதி மிகவும் இரகசியமாக தெரிவு செய்யப்பட்ட போராளிகள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக அது அமைத்திருந்தது. 2008 ம் ஆண்டு வரையில் அந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் அந்த நிகழ்வு பற்றி தெரிந்த ஒரு சிலர் மட்டும்தான் இன்று உயிர்வாழ்கின்றனர்.

புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் இரகசிய நடவடிக்கை செயல்பாட்டுகளை முன்வைத்து இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். தாயகத்தின் தாய், தாயகத்தின் தந்தை என்னும் தலைப்புக்களில் அவைகள் வெளியாகியிருந்தன.

இதில் தாயகத்தின் தாய் – கொலன்னாவ எண்ணெய் குதம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த இரகசிய நடவடிக்கை கரும்புலி கப்டன் மனோவின் தாயாரை மையக் கருவாகக் கொண்டு எழுதியது. மறைமுக தாக்குதல் நடவடிக்கைகள் பற்றிய மேலும் சில பதிவுகள் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்திருந்தன.

இந்த பின்புலத்தில்தான் இரகசிய நடவடிக்கையின் போது முகங்களை தொலைத்தவர்களின், முகங்களை காண்பிக்கும் நோக்கில் கிடைக்கப்பெற்ற விபரங்களை இங்கு தொகுத்துள்ளோம்.

மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும்போது அவற்றையும் இதில் இணைக்கின்றோம்.

 

கட்டுநாயக்கா வான்படை நிலைய தாக்குதலின் போது வீரச்சாவடைந்த 14 மறைமுக கரும்புலிகள்:

 

 

கொழும்பு உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்த 5 மறைமுக கரும்புலிகள்:

கொலன்னாவ எண்ணெய் குதம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்த 2 மறைமுக கரும்புலிகள்:

மறைமுக நடவடிக்கைகளின்போது வீரச்சாவடைந்த 19 மறைமுக கரும்புலிகள்:

மறைமுக நடவடிக்கைகளின்போது வீரச்சாவடைந்த 37 மாவீரர்கள்:

 

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

தாயகத்தின் தாய் – ச.பொட்டு

அம்மா எமக்கு அறிமுகமான அந்த நாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *