Home / ehouse

ehouse

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்

கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ...

Read More »

சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்

10.09.2007 – 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் ‘எம்.ரி. மன்யோசி’ எண்ணைக்கப்பல் மற்றும் ‘எம்.வி.செய்சின்’, ‘எம்.வி.கொசியா’ ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் பன்னாட்டு உதவிகளுடன் வழிமறித்த வேளையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

Read More »

சுதந்திர விடிவுக்காகத் கப்டன் குவேனி

நீண்ட தூரம்வரை காடு மண்டிக்கிடந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய குடிமனைகள். அதன் ஓரமாக பாம்பு போல் வளைந்து நெளிந்து போகும் அந்த புழுதிபடர்ந்த வீதியோரத்தில், அந்த சிறிய கடை போராளிகளின் வரவை எதிர்பார்த்து அவர்களின் தாகம் தீர்ப்பதற்கு ஏங்கிக்கொண்டிருக்கும்.

Read More »

இறுதிவரை உயர்ந்திருந்த துணிவு அதுவே கப்டன் அறிவு…

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது, அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானதுதான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.

Read More »

எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன்

கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். ...

Read More »

பல்துறை நிபுணன் லெப். கேணல் தென்னரசன்.

மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். ...

Read More »

எங்கள் சுதர்சன் (பல் வைத்தியர்) எங்கே?

சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான். காலம் அவனை மருத்துவத்துறைக்கு ...

Read More »