மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் 05.01.2008 அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட ‘கிளைமோர்’ தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன் – செந்தூரன்), லெப். சுகந்தன், லெப். காவலன், லெப். வீரமாறன் ஆகிய மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர். இவர்களுக்கான வீரவணக்க நிகழ்வின் படங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச. பொட்டு அவர்களின் பகிர்வும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Read More »எழுத முடியாத காவியங்கள்
தாயகத்தின் தந்தை – ச.பொட்டு
ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நிலத்தின் புழுதி நிறைந்த சீரற்ற வீதியில் கடகடத்து ஓடுகிறது சைக்கிள். மூச்சுப் பிடித்து முன்தள்ளி மிதித்தால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் மன …
Read More »தாயகத்தின் தாய் – ச.பொட்டு
அம்மா எமக்கு அறிமுகமான அந்த நாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப் பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. ஏதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொரு பெயராலும், குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும் போல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்றவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நினைவுப் பதிவுகளில்…. கரீர் என்ற …
Read More »மறைமுக கரும்புலிகள்
இவர்கள் யார்? உங்களுக்காக தங்களை மறைத்தவர்கள். இதுவரை எதிரிகள் கூட அறியாததை இனி நமது மக்கள் அறியட்டும். தமிழினத்தின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த பல்லாயிரம் வேங்கைகள் இருக்கின்றனர். ஈழப் போர் தோல்வியுறும் வரையில் அந்தப் பரித்தியாகிகளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் முகங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தங்களுக்காக வீழ்ந்தவர்களை மக்கள் அறிந்து கொண்டனர். வணங்கினர். ஆனால் இரகசிய நடவடிக்கைகளின் போது தங்களை தியாகம் செய்த நூற்றுக் …
Read More »காத்திருந்து பகையின் கதை முடித்த மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன்!
சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை.
Read More »கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்
தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் இக்கட்டான சூழல்கள் பலவற்றை மாற்றியமைத்து விடுதலைப்பயணத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்த தற்காப்புக்கவசங்கள் தற்கொடைப் போரளிகள். கரும்புலிகள் எங்கள் காவலர்கள். கரும்புலிப் படையணிகள் காலத்தை வென்று நிற்கும் பெரும்பலத்தின் தோன்றல்கள் ஈகத்தின் விளக்கமே இவர்கள் தானென்றால் அது மிகையாகாது – கரும்புலிகள் ஒவ்வொருவரினதும் உள்ளக்கிடக்கைகளை ஒட்டுமொத்தமாய் உள்ளாய்ந்து உணர்ந்து அறிந்தவர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்தான்.உறுதியையும் தெளிவையும் தலைவரிடம் கற்றுக்கொண்டு உரிமையையும் உறவையும் அவரிடமே பெற்றுக்கொண்டு ஊருலகமறியாது …
Read More »மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம் – ஈழத்துக் கொற்றவை
ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத …
Read More »
EelamHouse A place for Eelam history documents