Home / மாவீரர்கள் / எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்ட ஒரு உன்னத போராளி லெப் கேணல் தமிழ்முரசு

எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்ட ஒரு உன்னத போராளி லெப் கேணல் தமிழ்முரசு

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும்.விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்காக சாளைக்கு வந்தவன். விநியோக நடவடிக்கையில் தான், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கற்றவைகளில் ஒன்றான இயந்திரப் பொறியியலாலராகச் சென்றுவந்தான்.(அத்தோடு இவன் வீட்டில் இருக்கும்போதே பொறியியல்துறை சம்பந்தமான வேலைகளைச் செய்திருந்தான்). அவ் வேளையில் வெளிநாட்டிலிருந்து படகு வருவதால் அப்படகை கொண்டு வருவதற்காக கப்பலுக்குச் சென்றவன் அங்கே கப்பலின் இயந்திரப் பகுதியில் வேலையும் செய்தான்.

இவனது இயந்திரங்கள் மீதான ஆர்வம் அவைகளைக் கையாள்கிற விதம் என்பவற்றைக் கவனித்த அக்கப்பலின் கப்டனான பின்னர் மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்கள் இவனுடன் கதைத்தபோது தான் இவன் ஏற்கனவே டீசல் இயந்திரங்கள் சம்பந்தமாக பூரண அறிவைபெற்றிருப்பது தெரியவர பெத்தா அவர்கள் அப்போதைய டீசல் இயந்திரப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல் சதீஸ் அவர்களிடம் இவனைப் பற்றிக் கூற, சதீஸ் அவர்கள் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் இவனை டீசல் இயந்திரப் பிரிவிற்க்குள் சேர்த்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து டீசல் இயந்திரத்துறைக்குச் சென்றவன்.அங்கே சதீஸ் அவர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வர 02.11.2000 அன்று ஆழ்கடல் விநியோகப் பணியின் போது வீரச்சாவடைந்த லெப் கேணல் சதீஸ் அவர்களின் இடத்திற்க்கு தமிழ்முரசு சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டான். தொடர்ந்து புதிய போராளிகளுக்கும் கடற்கரும்புலிகளுக்கும் பயிற்சிகள் வழங்கி அவர்களையும் தனக்கு நிகராக வளர்த்தெடுத்தான்.முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து மேற்கொள்ளப்ட்ட விநியோகம் நிறுத்தப்பட்டு மன்னார் கடற்பரப்பிற்க்கு மாற்றப்பட்டபோது அவ் விநியோகம் முற்றிலுமாக மாறுபட்டிருந்தது அதாவது ரோலரில் சென்று கப்பலிலிருந்து பொருட்களை தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதாகும்.

ரோலர் டீசல் இயந்திரமாதலால் டீசல் இயந்திரப் பொறியியலாலராக தமிழ்முரசுவிடம் பயிற்சி பெற்ற அணியினரே சென்று வந்தனர்.அத்தோடு கொழும்பில் டீசல் இயந்திரத்தைக் கொள்வனவு செய்து இராணுவப் பிரதேசத்தில் அவ் இயந்திரங்களைப் பிரித்து அவ் இயந்திரங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படகின் மூலம் கொண்டு வந்து இவ்விநியோகத்திற்க்கு வலுச்சேர்த்தான்.நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் முயற்சியிலும் முழுமையாக பங்காற்றினான்.இப்படியாக அணைத்துப் பணிகளிலும் சிறந்து விளங்கிய தமிழ்முரசை 2005ம் ஆண்டின் முற்பகுதியில் அழைத்த தலைவர் அவர்கள் தனது பாராட்டையும் தெரிவித்தார்.

ரோலரில் வெடிமருந்து இணைக்கப்பட்டு இருக்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சிறிலங்காக் கடற்படையினர் இடையூறு விளைவித்தால் இரகசியத்தைக் காப்பதற்காக இயக்க மரபிற்கிணங்க அவ்ரோலரைத் தகர்ப்பார்கள்.இவ் விநியோக நடவடிக்கையை கடற்கரும்புலிகளே பெரும்பாலும் செய்து வந்தனர்.அந்தவகையில் கப்பலுக்குச் சென்ற ரோலரின் இயந்திரம் பழுதானதால் அவ் ரோலருக்கு புதிய இயந்திரத்தைக் கொண்டு சென்று கப்பலின் உதவியோடு மாற்றச் செல்லும்போது தான். தமிழ்முரசுவின் ரோலரை மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் 23.03.2006 அன்று சிறிலங்காக் கடற்படையினர்
சோதனை செய்ய முற்பட்ட வேளையில் மிகவும் அருகாமையில் வந்த டோராப் படகுடன் தங்களது ரோலரை வெடிக்கவைத்து அவ் டோராவையும் தாக்கி அழித்து வீரச்சாவடைகின்றார்கள்.

தமிழ்முரசுவைப் பொறுத்தளவில் இவன் கடற்கரும்புலி அல்ல இருந்தாலும் அவ் ரோலரை தகர்க்கும்
முயற்சியில் முற்று முழுதாக தன்னை அர்பணித்தவன் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் நிகழக்கூடாது என்று உறுதியாக நின்றவன் .இயக்க மரபிற்கிணங்க தங்களையும் அழித்து கடற்படையினரையும் அழித்து கற்பிட்டிக்கடற்பரப்பில் கடலோடு சங்கமமானார்கள்.எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்டவன். தலைமையின் சிந்தனைக்கேற்ப செயற்பட்டவன் . சிறப்புத் தளபதியின் வேகத்திற்ககேற்ப ஈடுகொடுத்த ஒருவீரன். நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் போரளிகளோடு பழகுகிற விதம் இப்படியான ஒரு உன்னத போராளியை 23.03.2006 இழந்து விட்டோம்.

மிகவும் அருகாமையில் வந்த டோராப் படகுடன் தங்களது ரோலரை வெடிக்கவைத்து அவ் டோராவையும் தாக்கி அழித்து வீரச்சாவடைகின்றார்கள். தமிழ்முரசுவைப் பொறுத்தளவில் இவன் கடற்கரும்புலி அல்ல இருந்தாலும் அவ் ரோலரை தகர்க்கும்
முயற்சியில் முற்று முழுதாக தன்னை அர்பணித்தவன் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் நிகழக்கூடாது என்று உறுதியாக நின்றவன் .இயக்க மரபிற்கிணங்க தங்களையும் அழித்து கடற்படையினரையும் அழித்து கற்பிட்டிக்கடற்பரப்பில் கடலோடு சங்கமமானார்கள்.எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்டவன். தலைமையின் சிந்தனைக்கேற்ப செயற்பட்டவன் . சிறப்புத் தளபதியின் வேகத்திற்ககேற்ப ஈடுகொடுத்த ஒருவீரன். நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் போரளிகளோடு பழகுகிற விதம் இப்படியான ஒரு உன்னத போராளியை 23.03.2006 இழந்து விட்டோம்.

– சு.குணா –

About ehouse

Check Also

மதிப்புக்குரிய தளபதி பால்ராச்

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து ...

Leave a Reply