Home / மாமனிதர் / மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசா

மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசா

தேசியத் தலைவரால் சின்னத்தம்பி சிவமகாராசா மாமனிதராக மதிப்பளிப்பு.

ஈழநாடு முதன்மைப் பணிப்பாளர் சின்னத்தப்பி சிவமகாராசாவுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் விருதி வழங்கி மதிப்பளித்துள்ளனர். சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

22.08.2006

 

சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். தமிழிழன விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து விட்டது. எதிரியின் கோரமான தாக்குதலுக்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார். இந்த இலட்சிய மனிதரை இழந்து எமது தேசம் இன்று ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கிறது.

 

திரு.சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் அரசியற் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதர். அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். எளிமையும் இனிமையும் இணைந்த ஒரு இனிய மனிதர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வார். அனைவரையும் கவர்ந்துகொண்ட ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியும் சமூகசேவையானருமாவார்.

 

இவர் ஒரு சிறந்த தேசபக்தர். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர். தமிழரின் வாழ்வு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். இந்த இலட்சியப்பற்று அவரை எமது விடுதலை இயக்கத்தோடும் இறுகப்பிணைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் போராட்ட இலட்சியத்தையும் முழுமையாக நேசித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தார்.

 

அரசியல், ஆன்மீகம், கூட்டுறவு, ஊடகம் எனப் பல்வேறு பெரும் தளங்களில் இவர் செயற்பட்டார். இவரது செயற்றளம் அகன்று விரிந்திருந்தது. யாழ் மண்ணோடும் அந்த மண்ணில் மக்களோடும் ஒன்றியதாக அவரது வாழ்வு சுற்றித்திரிந்தது. எதிரியின் அகோர ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ள யாழ் மண்ணில் நின்றவாறு, எதிரியின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அசைந்துகொடுக்காமல் யாழ் மக்களுக்கு என்றுமே காப்பரணாக நின்றார். போர் நெருக்கடிமிக்க நாட்களில் அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்தார். ஆக்கிரமிப்புப் படைகளின் அழிவுகளையும் அட்டூழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். மக்களிடத்தில் விடுதலை உணர்வையும் தேசப்பற்றையும் தட்டியெழுப்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக யாழ் மண்ணில் நமது ஈழநாடு என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக இருந்து அந்தப் பத்திரிகையின் இன்றைய வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றிய மக்கள்பணி அளப்பரியது.

 

திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமயடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. அவர்கள் எமது தேச ஆன்மாவில் என்றும் நீங்காத நினைவுகளாக காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள்.

 

“புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்”

 

வே.பிரபாகரன்.

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

More links

https://noolaham.net/project/532/53161/53161.pdf

About ehouse

Check Also

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Leave a Reply