கணிதமேதை எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்.
1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட “எலியேசர் தேற்றம்” கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ்மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து அரும்பாடுபட்டவர்.தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை ஆஸ்திரேலிய அரசு மட்டத்தில் எடுத்துச்சென்று பேசியவர். இவருக்கு 1997 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் ” மாமனிதர் ” விருது வழங்கப்பட்டது முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும.