Home / மாவீரர்கள் / முக்கிய தாக்குதல் சம்பவங்கள்

முக்கிய தாக்குதல் சம்பவங்கள்

கடற்புலிகளின் தொழில்நுட்பமும் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவும்

1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது . அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு ...

Read More »

150 காவலரன் மீதான தாக்குதல் ஒரு பார்வை

பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு ...

Read More »

எடித்தாராவை மூழ்கடித்த கடற்கரும்புலிகள்

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். அதேசமயம் மேலதிக பகுதிகளைக் கைப்பற்றமுனைந்த இராணுவத்தினரின் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அத்துடன் கடற்புறா அணியினர் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றைத் தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பெருங்காயமடைந்தவர்களை இங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிச் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர். இது இவ்வாறிருக்க ,இரண்டாம் ...

Read More »

1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்

வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் ...

Read More »

தென்தமிழீழ கடல்விநியோகத்தில் காவியமான கரும்புலிகள்

சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் ...

Read More »

நடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை ...

Read More »