Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / 1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்

1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்

வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் அப்போதைய விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கை அணியான கடற்புறா அணிக்குக் கட்டளை வழங்கப்பட்டதுடன்.

அதற்கான ஆலோசனையும் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பணிகளையும் அனுப்பிவைத்தார் .அதற்கமைவாக கடற்புறாவில் கடமையாற்றிக்கொண்டிருந்த கடற்கரும்புலியான ெஐயந்தன் அவர்களும் ஏற்கனவே கடலனுபவம் கொண்டிருந்த கடற்கரும்புலியான சிதம்பரம் அவர்களும் கடற்கரும்புலியாகச்சென்று அக்கட்டளைக்கப்பலைத் தாக்குவதென்றும் தீர்மாணிக்கப்பட்டது.அதற்கமைவாக 04.05.1991 அன்றிரவு தளபதி சாள்ஸ் /புலேந்திரன் (வீரச்சாவு 11.06.1993)அவர்கள் தலைமையிலான சண்டைப் படகுகள் மற்றக் கடற்படைக்கலங்கல் மீது தாக்குதல் நடாத்தி கரும்புலிப்படகின் பிரதான இலக்கான அபித கட்டளைக் கண்காணிப்புக்கப்பலுக்கு அருகில் அழைத்து சென்று விட்டனர்.அதற்கமைவாக கடற்கரும்புலி கப்டன் ெஐயந்தன் கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகியோர் தங்களது படகால் அபித கட்டளைக் கண்காணிப்புக்கப்பல் மீது மோதி வெடித்தனர்.

ஆயினும் அக்கப்பல் பாரிய சேதமேற்பட்டு கப்பல் வடமராட்சிக் கடற்பகுதியிலிருந்து அகன்றது.இது கடற்கரும்புலிகளின் இரண்டாவது தாக்குதலென்பதால் போதிய அநுபவமின்மை காரணத்தாலும் போதிய வெடிமருந்துகளற்ற காலமென்பதாலும் இக்கப்பலை மூழ்கடிக்க முடியாவிட்டாலும் இவைகளில் பட்ட அநுபவத்தால்த்தான் பிற்பட்ட தாக்குதலில் பல வெற்றிகளைத் தேடித்தந்தது.இவ்வெற்றிகரத் தாக்குதலை கடலில் சாள்ஸ் அவர்கள் வழிநடாத்த இவ் அனைத்து நடவடிக்கைகளையும் அப்போதைய கடற்புறாப் பொறுப்பாளரான தளபதி சங்கர் தாத்தா அவர்களின் துணையுடன் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் வழிநடாத்தினார்கள்.இந்த நடவடிக்கையில் அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளரான தளபதி சூசை அவர்களும் தளபதி கடாபிஅவர்களும் தளபதி டேவிட்(வீரச்சாவு 09.06.1991) அவர்களும் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்கினார்கள்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply