Home / மாமனிதர்

மாமனிதர்

மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர். இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா ...

Read More »

மாமனிதர் கணிதமேதை எலியேசர்

கணிதமேதை எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். 1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட “எலியேசர் தேற்றம்” கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ்மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து ...

Read More »

மாமனிதர் விக்னேஸ்வரன்

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் ...

Read More »

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் ...

Read More »

மாமனிதர் பேராசிரியர் துரைராசா

“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து ...

Read More »

மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது. திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான ...

Read More »

மாமனிதர் சிவநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: மாமனிதர் சிவநேசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தேசியத் தலைவர்…..           தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07.03.2008. தமிழீழ மண்ணையும் ...

Read More »

மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசா

தேசியத் தலைவரால் சின்னத்தம்பி சிவமகாராசா மாமனிதராக மதிப்பளிப்பு. ஈழநாடு முதன்மைப் பணிப்பாளர் சின்னத்தப்பி சிவமகாராசாவுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் விருதி வழங்கி மதிப்பளித்துள்ளனர். சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.   தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 22.08.2006   சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, ...

Read More »

மாமனிதர் ஞானரதன் (சச்சிதானந்தசிவம்)

மாமனிதர் ஞானரதன் மே 22, 1940- ஜனவரி 18,2006, அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. ஈழத்து ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவர். நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்கள், குறும்படங்கள், முழுநீளப்படங்களின் மூலகர்த்தா. ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவர். தமிழீழத் தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவர். சிங்கள ...

Read More »

மாமனிதர் நாவண்ணன்

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்… இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் ...

Read More »