Home / மாவீரர்கள் / முக்கிய தாக்குதல் சம்பவங்கள் / 150 காவலரன் மீதான தாக்குதல் ஒரு பார்வை

150 காவலரன் மீதான தாக்குதல் ஒரு பார்வை

பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத்
தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்து தளபதி பால்ராஜ் அவர்களுடன் தனிமையில் கதைத்த பின்னர் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் யாழ்மாவட்டத் தாக்குதலனிப் போராளிகளில் ஒரு தொகுதி அணி உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது.

(அன்றைய விளங்கப்படுத்தப்பட்ட திட்டத்தில் அறுபத்தியிரண்டு காவலரனை தாக்கி அழிப்பதே திட்டமாக இருந்து.) அதற்கமைவாக புறப்பட்ட அவ் அணிகள் 01.10.1992 அன்று கட்டைக்காட்டு முகாம் தாக்குதல்களில் ஏனைய படையணிகளுடன் இணைந்து அவ் வெற்றிகரத் தாக்குதலில் பங்குபற்றியது.அதன் பின்னர் பயிற்சிகள் தொடர்ந்தன.ஆனால் இம்முறை தாக்கி அழிக்கப்படவேண்டிய காவலரன்களின் தொகை 150
ஆக்கப்பட்டது. ( இதுவே தமிழீழத்தில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட கூடுதலான காவலரன் அழிப்பாகும்.)அதற்கேற்ற மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டது.தாக்குதலுக்கான நாளும் வந்தது.தாக்குதல் திட்டம் தளபதி பால்ராஜ் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.இத் திட்டத்தின்படி 150 காவலரன்களைக் தாக்கி கைப்பற்றி வைத்திருந்து விட்டு பின்வாங்குவதாகவே இருந்து.

23.11.1992 அணிகள் காவலரனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் எதிரியின் கண்ணிவெடி ஒன்று போராளி ஒருவரின் காலில் வெடித்தது அருகிலிருந்த போராளி ஓடிச் சென்று அப் போராளியின் வாயைப்பொத்த அப்போராளியோ நான் கத்த மாட்டன் நீங்கள் நகருங்கள் என்றான். அன்று அப்போராளியின் அர்ப்பணிப்பு தன்னால் இச் சண்டையில் ஏதும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது வேதனையை சகித்துக்கொண்ட விதம் சக போராளிகளுக்குள் இச் சண்டையை வெற்றி கொள்வதிலேயே இருந்து. 24.11.1992 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமானது .சண்டை தொடங்கிய குறிப்பிட்ட நேரத்திலேயே காவலரன் தாக்குதலனியின் முழுக்கட்டுப்பாட்டில் காவலரன்கள் கொண்டுவரப்பட்டன.இச்சமரில் கனரக ஆயுதம் ஒன்று (37MM) நிலப்படுத்தப்பட்டிருந்தது.ஆனால் சென்றவர்களுக்குத் எவ்வாறு இயக்குவதோ அல்லது எவ்வாறு கழட்டுவதென்றோ தெரியாது தகவல் கட்டளைமையத்திற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.ஆயுத நிபுணர்களுள் ஒருவரான தளபதி கடாபி அவர்கள்.வருகிறார்.என்றதும் போராளிகளுக்கு உற்சாகம் மேலிட்டது ஏனெனில் எப்படியாகிலும் அவ் ஆயுதத்தை கைப்பற்றிவிடலாமென்று.

அந்த காலத்தில் அவர் ஆயுதங்களை கையாள்வதிலும் மற்றும் புதிய ஆயுதங்களை கையாள்வதில் ஒரு வித்தகராக இருந்தார்.இருந்தாலும் அவர் கடுமையாக முயற்சித்தும் எதிரியானவன் அவ் ஆயுதத்தை பலமா க நிலப்படுத்தப்பட்டதாலும் நேரம் குறைவான காரணத்தாலும் அவ் ஆயுதம் தகர்க்கப்பட்டது.இச் சண்டையில் பின்வாங்கவும் என்று கைபேசியில் சொல்லமுடியாது .ஏனெனில் எதிரி ஒட்டுக் கேட்பான் அதனால் பரிபாசையில் பலாலி விமானத்தளம் நோக்கி முன்னேறவும் என அறிவிக்கப்பட்டது.அதை ஒட்டுக்கேட்ட படையினர் மூர்க்கத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தான்.இச் சமயத்தில் மகளிர் அணியினரின் பக்கமாக பின்வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதை அவதானித்த தளபதி குணா அவர்கள் உடனடியாக தானே களத்தில் இறங்கி அணிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும், காயமடைந்த போராளிகளையும்.கொண்டு வந்து சேர்த்தார்.இச் சமரில் அவருடைய பங்களிப்பு என்பது ஒருவரியில் கூறிவிடவோ அல்லது எழுதி விடவோ முடியாது.அன்று அவர் களத்திற்க்கு சென்றிருக்காவிடில் நிலைமையை கற்பனைகூட செய்யமுடியாது.இப்படியாக பல்வேறு அர்ப்பணிப்புகள் நிறைந்த இச் சமரில் ஈழப்போா் 01,02லும் இந்திய இராணுவத்துடனான பல் வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றிய கப்டன் வீமன் அவர்களும் மேஜர் டொச்சன் அவர்கள் உட்பட ஐம்பத்தியெட்டுப் போராளிகள் இச் சமரில் வீரச்சாவடைந்தனர்.இச் சமரிலேயே தான் கள விசாரணை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.இவ்வெற்றிகரச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தினார்.

எழுத்துருவாக்கம்…சு.குணா.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்

வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் ...

Leave a Reply