Breaking News
Home / மாவீரர்கள் / முக்கிய தாக்குதல் சம்பவங்கள் / தலைவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றிகர முகாம் மீட்புக்கு காரணம்

தலைவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றிகர முகாம் மீட்புக்கு காரணம்

மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள்.

1988.08 முதலாவது வாரத்தில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் முகாம் ஒன்றின் பொறுப்பாளராக மேஐர் ரஞ்சன் அவர்களும்.(வீரச்சாவு. 29.06.1989) கப்டன் மயூரன் அவர்கள். (வீரச்சாவு.11.11.1993) ஆகியோர் உள்ளிட்ட பத்துப் போராளிகள் இருந்தனர் . இம்முகாமானது வெளிப்புறக் கண்காணிப்புமுகாமாகவும் இருந்தது.அந்த நேரத்தில் இவர்களது முகாமிற்கருகில் ஆள் நடமாட்டத்தைக் கவனித்த மயூரன் யோகி அண்ணையை வருகிறார் போலக்கிடக்கு எனக்கூற இந்தநேரம் யோகிஅண்ணைவரமாட்டாரெனக் கூறிய சகபோராளி கூறவும் காவல்கடமையில் நின்ற போராளி இந்தியஇராணுவத்தை அடையாளம்கண்டு தாக்குல் நடாத்தவும் சரியாகஇருந்தது.

இந்தியப்படைகளோ பெருமெண்ணிக்கையில் இருந்தார்கள் .போராளிகளோ குறிப்பிட்டளவானவர்களே இருந்தார்கள்.அப்படியிருந்தும் பலமான ஒருதாக்குலைத் நடாத்தினார்கள் இருந்தும் இந்தியப்படையினரின் பலம் அதிகமாக இருந்ததால் அம்முகாமிலிருந்த போராளிகள் பின்வாங்கினார்கள்.
பின்வாங்கிய போராளிகள் அருகிலிருந்த தலைவர் அவர்களின் முகாமிற்க்குச் சென்றார்கள்.அங்குசென்ற போராளிகளை தலைவர் அவர்கள் நேரடியாக களநிலவரங்களைக் கேட்டறிந்து அந்தநேரம் காட்டிலுள்ள போராளிகளுக்குப் பொறுப்பாகவிருந்த தளபதி சொர்ணம் அவர்களை அழைத்து இந்தியப்படைகள் கைப்பற்றிய அம்முகாமை உடனடியாக மீட்கவேண்டுமெனக் கடுமையாக கட்டளையிட்டார்.அம்முகாமை இந்தியப்படைகள் தொடர்ந்தும் வைத்திருந்தால் தலைவர் உட்பட்ட போராளிகள் மணலாற்றுக்காட்டில் இருக்கமுடியாது .மற்றது அம்முகாமில் தண்ணீரும் மேலாக உள்ளது இம்முகாமில் சுமார் பத்தடி ஆழத்திலேயே தண்ணீர் உள்ளது .மற்ற போராளிகளின் முகாம்களில் சுமார் முப்பது நாற்பதடியில் தண்ணீர் இருந்தது.இவ்விருகாரணங்களுக்காகவுமே தலைவர் அவர்கள் அப்படியான உத்தரவைக் கொடுத்தார்.
அங்கிருந்த போராளிகளை ஒருங்கிணைத்து தலைவர் அவர்கள் கொடுத்த தாக்குதற்திட்டத்திற்கேற்ப அணிகளைப் பிரித்து தாக்குதலுக்குத் தயாரானார் தளபதி சொர்ணம் அவர்கள்.1988.08 .06 அன்று அதிகாலை இந்தியப்படயினர் கைப்பற்றிய புலிகளின் முகாம் மீது குறைந்தளவு அதாவது நாற்பது போராளிகள் கொண்ட ஒரு அணி ஒருபாரிய தாக்குதலைத்தொடுத்தனர்.

இவவெற்றிகரத்தாக்குதல் மதியம் வரைநீடித்தது விடுதலைப்புலிகளின் இத்தீரமீகு தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இந்தியப்படை பாரிய இழப்புக்களுடன் முகாமை விட்டு பின்வாங்கியது.
மதியமளவில் முகாமிற்க்குள் நுழைந்த புலிவீரர்கள் பலபடைச்சடலங்களையும் படைத்தளபாடங்களையும் கைப்பற்றினார்கள்.இவ்வெற்றிகரத்தாக்குதலில் மகளீர் அணியும் பங்குபற்றியது. இவ்வெற்றிகர முகாம்மீட்ப்புச்சமரை பிரிகேடியர்
சொர்ணம் அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.
குறைந்தளவுப் போராளிகளைக்கொண்டு பாரியதொருபடைப்பலத்திற்கெதிராகா மிகக்கடுமையாகவும் அதேசமயம் மிகுந்த அர்ப்பணிப்புடன் போரிட்டு முகாமை மீட்டனர்.உண்மையில் களச்சூழல் இந்தியப்படைக்குச் சாதகமாகவே இருந்தது இருந்தாலும் இச்சமரில் பங்குபற்றிய ஒவ்வொருபோரிளிகளின் மனதிலும் இம்முகாமை மீட்கவேண்டும் தலைவர் அவர்களைப்பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது .
இவ்வெற்றிகரத்தாக்குதலில் பங்காற்றி வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்த மேஐர் ரஞ்சன் அவர்கள். (வீரச்சாவு.29.06.1989 )

கப்டன் மயூரன் அவர்கள். (வீரச்சாவு. 11.11.1993 )

கட்டளைத்தளபதி பானு அவர்கள்(இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலில் வீரச்சாவு.)

கப்டன் நெடுமாறன் அவர்கள். (வீரச்சாவு..30.08.1989) தளபதி லெப்.கேணல் அன்ரன் அவர்கள்(முன்னாள் வன்னிமாவட்டச் சிறப்புத்தளபதி.வீரச்சாவு.ஆனந்தபுரம்.)

கேணல்.மனோமாஸ்ரர்.( வீரச்சாவு.29.04.2009)உள்ளிட்ட போராளிகள் பங்கெடுத்தனர்.
இத்தாக்குதலில் இறுதிவரைபோராடி
வீரச்சாவடைந்தவர்களுக்கும் இச்சமரில் போராடி பின்வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்தவர்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்.
இத்தீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களின் விபரம் வருமாறு….

லெப். சோமேஸ்.
நடராசா நந்தகுமார்.
பலாலி மத்தி வசாவிளான் யாழ்ப்பாணம்.

2ம் லெப்..விக்ரர்.
நேசராசா விக்ரோறியன்
விகடர் வீதி கணேசபுரம் திருநகர்
கிளிநொச்சி.

 

எழுத்துருவாக்கம்.சு.குணா.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் கப்டன் தோழன் ஆகியோரின் தியாகம்

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை ...

Leave a Reply