Recent Posts

October, 2021

  • 11 October

    பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்

    2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது ...

    Read More »
  • 11 October

    கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்

    1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். ...

    Read More »
  • 11 October

    லெப். கேணல் மறவன் மாஸ்ரர்

    தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத்தடங்களில்கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப் கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும் லெப். கேணல் மறவன் மாஸ்ரர் முதன்மையான பாத்திரம் வகித்தவர். அத்துடன் கடற்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுப் பாலத்தைக் கட்டி வளர்ப்பதிலும் ...

    Read More »
  • 11 October

    சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை – தளபதி சூசை

    கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த ...

    Read More »
  • 9 October

    லெப்.கேணல் அன்புமணி(திவாகர்)

    நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து ...

    Read More »