தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிக் கல்விமேம்பாட்டுநிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் ஒரு கோடி உரூபா இந்நிதியத்திற்கு ஒதுக்கப்படும்.
எம்மால் நடத்தப்படும் தமிழ்மொழித் திறன்தேர்விலும் பொதறிவு மற்றும் உளச்சார்புத் தேர்விலும் சிறந்த பெறுபேறு பெறுவோருக்கு இந்நிதியத்திலிருந்து காசுப்பரிசில்கள் வழங்கப்படும்.
தமிழீழத்தில், க.பொ.த (சா/த) தரத் தேர்விற் சிறந்த பெறுபேறுகளுடன் தேறி நிதிவாய்ப்பின்மையால் தொடர்ந்து கற்கமுடியாத மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதில் நிதிச்சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவருக்கும் பின்வரும் பாடங்களைக் கொண்ட கற்கைநெறிகளைக் கற்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்
க.பொ.த உயர் தரத்திற் பின்வரும் பாடங்களிற் பொருத்தமான ஏதாவது மூன்று பாடங்கள் இணைந்த கற்கைநெறி.
|
|
பல்கலைக்கழகத்தின் பின்வரும் கற்கைநெறிகள்
|
|
நிதி ஒதுக்கீடு
தமிழ்மொழித்திறன் 25 இலட்சம்
பொதறிவும் உளச்சார்பும் 25 இலட்சம்
க.பொ.த உயர்தரக் கல்வி 25 இலட்சம்
பல்கலைக்கழகக்கல்வி 25 இலட்சம்
மேலதிக விளக்கங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நிதித்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
25.11.2004