Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / மாவீரன் சுகுமார்

மாவீரன் சுகுமார்

தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி தர்மபுர கிராமத்திலும் மக்கள் குடியேறியிருந்தனர் அவனுக்கு போரின் தாக்கம் அவனை பாதிக்க தொடங்கிய வேலை கிளிநொச்சி யை இராணுவம் ஆக்கிரமித்தவுடன் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான்
அதன்படி 1996 ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து லெப்.கேணல் இம்ரான் பாண்டியன் படையணியில் மேஜர் மாறன் -01 பயிற்சி முகாமில் சுகுமார் என்கிற இயக்கபெயருடன் ஆரம்ப பயிற்சியை பெற்றான்.

பயிற்சியில் நல்ல திறமையாக செயற்பட்டான் அதேவேளை அவனுக்கு திடகாத்திரமான உடலமைப்பும் குறிபார்த்து சுடுவதிலும் வல்லவனாக இருந்தபடியால் ஆரம்ப பயிற்சி நிறைவுற்கு பின் தாக்குதல் அணியாக பிரிக்கும்போது LMG இலகுரக கனரக ஆயுத சூட்டாளனாக தேர்வு செய்யப்படுகிறான். LMG பயிற்சி மனலாறு முகாமில் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் போது சிங்களப்படைகளின் ஜெயசிக்கிறு படைநடவடிக்கை ஆரம்பமாக போவதை அறிந்த புலிகள் அதனை தடுப்பதற்கு பல தாக்குதல் அணிகளை களமுனைற்கு அனுப்பினார்கள் அதில் சுகுமாரின் அணியும் கலந்து கொண்டு பலமுன்னேற்ற முயற்சிகளை முறியடிப்பதில் வீரத்துடன் ஈடுபட்டான். இராணுவத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் முன்னரங்கில் நின்றவேளை தவறுதலான சூட்டில் சுகுமார் கையில் காயப்பட்டு சிகிச்சைற்காக பின்நகர்த்தப்பட்டான். காயம் மாறியபின் தான் சண்டைக்களத்திற்கு போகவேணும் என்கிற எண்ணத்தை தனது படையணி சிறப்புத்தளபதிற்கு தெரியப்படுத்தினார் ஆனால் அவர் அவனை தொலைத்தொடர்பு கற்கைநெறிக்கு அனுப்பிவைத்தார் விருப்பமில்லாமல் சென்றாலும் தொலைத்தொடர்பு கல்வியை சிறப்பாக கற்றுதேர்ந்தான். இந்த காலத்தில் சண்டைற்கு செல்லும் எண்ணம் நிறைவேறாத காரணத்தாலும் சிங்களப்படைகளுக்கு எதிரினான தனது ஓர்மத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தன்னை கரும்புலிகள் அணிற்கு தேர்வு செய்யும்படி சிறப்புத்தளபதி கடாபியண்ணாவுற்கும் தமிழீழ தேசியத்தலைவருக்கும் தொடர்ச்சியாக பல கடிதங்களை அனுப்பியும் அவனது முயற்சி பயன் அளிக்கவில்லை ஆனால் கடாபியண்ணாவின் நன்மதிப்பை பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் இரகசியம் வாய்ந்த தேசியத்தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் படைக்கல பாதுகாப்பு அணிற்கு தொலைத்தொடர்பாளனாக 1998 ஆரம்ப காலத்தில் அனுப்பபட்டான்.

படைக்கல பாதுகாப்பு பணி அந்த காலத்தில் மிகவும் ஆட்பற்றாக்குறை கடுமையான வேலைப்பலுவுடன் இயங்கி வந்த நேரம் சுகுமார் தனிஒருவனாக 24 மணிநேரமும் தொலைத்தொடர்பு கடமையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அதேநேரம் தாக்குதலுக்கான வெடிபொருட்களை பார ஊர்திகளில் ஏற்றி அனுப்ப வேணும் அத்தோடு விடுதலைப்புலிகளால் கொள்வனவு செய்து வரும் வெடிபொருட்களை முகாங்களில் களஞ்சியப்படுத்த வேணும் என பல வேலைகளை குறிப்பிட்ட போராளிகளே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் தனது தொலைத்தொடர்பு கடமையோடு இரவுபகல் பாராமல் எல்லாவேலையிலும் சோர்வு இன்றி ஈடுபடுவான். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் போரியல் வெற்றியின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வெடிபொருட்களின் கணக்காளராக இருந்த திருமாலுக்கு உதவியாக சுகுமாரை பொறுப்பாளர் சுயாகியண்ணா நியமித்தார்.

சுகுமார் தனக்கு தந்த பணியின் இரகசியத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து மிகவும் ஈடுபாட்டுடன் வேலைசெய்து வந்தான்.2002 சமாதான காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணி இரண்டாக பிரிக்கப்பட்டு லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி என்கிற புதிய படையணியின் பெயருடன் இருந்த படையணிற்குள் படைக்கல பாதுகாப்பு அணி இயங்கிவந்தது. புதிய படையணியின் நிதிப்பொறுப்பாளராக திருமால் 2003 செல்ல சுகுமார் படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளராக நியமிக்கப்பட்டான்.

சுகுமார் கணக்காளராக வந்த பின் வெடிபொருட்களின் மாதாந்த இருப்பு வரவுசெலவுகளின் கணக்கறிக்கை தேசியத்தலைவருக்கு அனுப்பிய விதம் வடிவமைப்பு தேசியத்தலைவருக்கு பிடித்து தலைவரின் பாராட்டுகளை பெற்றான். சுகுமாருக்கு எந்த ஆயுதம் எந்த வெடிபொருள் எந்த மாவட்டத்தில் எந்த களஞ்சியத்தில் பாதுகாப்பாக இருப்பில் உள்ளது என்கிற மனதிலே பதியவைத்துவிடுவான் அவனது திறமையான செயல்பாட்டை பார்த்து பொறுப்பாளரால் பீல்ட்பைக் மோட்டர்சைக்கிள் கொடுக்கப்பட்டுயிருந்தது தேசியத்தலைமையிடமிருந்து ஆயுத வெடிபொருட்களை குறிப்பிட்ட படையணி அல்லது தளபதியிடம் கொடுக்க சொல்லி கட்டளை வந்தால் சுகுமாரின் பீல்ட்பைக் உறுமிக்கொண்டு போகும்.

2006 நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின் சுகுமாரின் பணி கடுமையானது முக்கியமான வெடிபொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேணும் என்றால் தனி ஒருவனாகவே பார ஊர்திகளில் வெடிபொருட்களை ஏற்றி கொண்டுபோய் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுப்பான் அவனது கன்டர் வாகனம் எப்போதும் வெடிபொருட்களை ஏற்றிய வண்ணமே இருக்கும். இந்த காலப்பகுதியில் சுகுமார் முன்னர் கொடுத்த கரும்புலிகள் அணிற்கான கடிதத்திற்கான பதிலாக அவனை கரும்புலிகள் அணிற்கு வரும்படி அழைப்பு வந்தது சுகுமாரும் உற்சாகமாக கரும்புலிகள் அணிற்கு செல்ல தயார் ஆனான் ஆனால் பொறுப்பாளர் சுயாகியண்ணை சுகுமாரின் வேலையின் முக்கியத்தையும் தற்போதைய நிலையில் அவனை அனுப்பமுடியாமல் உள்ள காரணத்தையும் தேசியத்தலைவருக்கு தெரியப்படுத்தி அவனை தனது கடமையை தொடர்ச்சியாக செய்ய அனுமதி வேண்டினார் இதனால் சுகுமார் மீண்டும் மனமுடைந்தான் இருந்தபோதிலும் தனது வேலையின் முக்கியத்துவத்தையும் தன்மீது பொறுப்பாளர் மற்றும் தேசியத்தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கைற்கு ஏற்றார்போல் சிறப்பாக செயல்படவேண்டும் உத்வேகத்துடன் செயல்பட்டான்.

2008 ஆண்டு சிங்களப்படைகள் வன்னியை ஆக்கிரமிக்க தொடங்க படைக்கல இருப்புமுகாங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நாளாந்த மாறிக்கொண்டுயிருந்தது 2009 ஆண்டு ஐனவரி மாதம் விசுவமடுவை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் முன்னேறிவர படைக்கல பாதுகாப்பு அணியின் பிரதான தளமும் கைவிடப்பட்டு வெடிபொருட்கள் பின்நகரந்தப்பட்டன.

தேசியத்தலைவருக்கும் மட்டுமே தெரிந்த விடுதலைப்புலிகளின் ஆயுதப்பலம் சுகுமாருக்கும் தெரியும் ஏனெனில் கடந்த 9 வருடங்களாக எவ்வளவு ஆயுத வெடிபொருட்கள் எமது அமைப்புற்கு வந்தது அது எந்தெந்த படையணிற்கு எவ்வளவு கொடுத்தது என்பதை அறிந்தவன் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 15 திகதிவரை தேசியத்தலைவரின் கட்டளைற்கு அமைய ஆயுத வெடிபொருட்கள் வினியோகத்தை செய்தவன் அன்றிறவு தேசியத்தலைமையுடன் முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து வெளியேறும் அணியில் படைக்கல பாதுகாப்பு அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் ஒருவனாக புறப்பட்டான் ஆனால் பிரிகேடியர் சொர்ணம் வீரச்சாவுடன் அந்த நாள் திட்டம் கைவிடப்பட அடுத்த நாள் பகல் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக சுகுமாரின் அணிகளை பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டுயிருந்தது ஆனால் மக்களும் பெருமளவில் வெளியேற மக்களை கேடயமாக வைத்து இராணுவம் முன்னரங்க பாதுகாப்பை உடைத்துகொண்டு சுகுமாரின் அணிகள் நின்ற இடத்தை நெருங்கிவந்துவிட்டது உடனடியாக இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சுகுமாரின் அணி முன்னேற்றத்தை முறியடிக்கும் கடும எதிர்தாக்குதலை மேற்கொண்டு முன்னேற்ற முயற்சியை தடுத்தனர் ஆனால் 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தான். விடுதலைப்புலிகளின் படைக்கல பலத்தை முழுமையாக அறிந்த இரகசியகாப்பாளன் முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் மூச்சை நிறுத்தினான்.

About ehouse

Check Also

கேணல் சங்கீதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் ...

Leave a Reply