Home / ஆவணங்கள் / பகிர்வுகள் / 1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான்,வாசு,அஜித்(பாம்பன்),பரன்,றொபோட்(வெள்ளை)ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார்.

அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது(zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும்.

(இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்)
அ.சேரா

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு ...

Leave a Reply