Home / மாவீரர்கள் / பதிவுகள் / சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்

சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்

10.09.2007 – 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் ‘எம்.ரி. மன்யோசி’ எண்ணைக்கப்பல் மற்றும் ‘எம்.வி.செய்சின்’, ‘எம்.வி.கொசியா’ ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் பன்னாட்டு உதவிகளுடன் வழிமறித்த வேளையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்புலி லெப். கேணல் வேங்கை,

கடற்புலி லெப். கேணல் திருவருள்,

கடற்புலி லெப். கேணல் எரிமலை,

கடற்புலி லெப். கேணல் செண்பகச்செல்வன்,

கடற்புலி லெப். கேணல் எழில்வேந்தன்,

கடற்புலி லெப். கேணல் சோபிதன்,

கடற்புலி லெப். கேணல் ஐது,

கடற்புலி லெப். கேணல் சிறீகாந்த்,

மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன்,

கடற்கரும்புலி நிதர்சன,

கடற்புலி மேஜர் கர்ணன்,

கடற்புலி மேஜர் ஈழப்பிரியன்,

கடற்புலி மேஜர் தமிழ்நம்பி,

கடற்புலி கப்டன் அருணன்,

கடற்புலி கப்டன் புலிக்குட்டி,

கடற்புலி கப்டன் எழில்கண்ணன்,

கடற்புலி கப்டன் குன்றன்,

கடற்புலி கப்டன் நிரோவியன்,

கடற்புலி கீதன்,

கடற்புலி தென்னவன்,

நாட்டுப்பற்றாளர் தங்கன்

உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு (1500 NM ) கடல் மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது) அவதானித்த ‘எம்.வி.கொசியா’ கப்பல் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார்.

மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப். கேணல் சோபிதன் தலைமையிலான எம்.வி.செய்சின் வணிகக் கப்பலும், லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான ‘எம்.ரி.மன்யோசி’ எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின. இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்க சயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள்.

முன்றாவது கப்பலான ‘எம்.வி.கொசியா’ லெப். கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர் கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர். இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக் கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று (டோபிரோ) இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாது இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப். கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார். அடுத்தது லெப். கேணல் வேங்கை மற்றும் லெப். கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டார் பீரங்கியை கப்பலில் வெல்டிங் செய்து நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள்.

இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி, கப்டன் அருணன், கப்டன் புலிக்குட்டி, கப்டன் குன்றன் ஆகியோர் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள்.

இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி விடுதலைக்கு பலம் சேர்த்தும் 10 – 11.09.2007 அன்றைய நாட்களில் கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்

கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் ...

Leave a Reply