Recent Posts

July, 2021

  • 26 July

    நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – லெப் கேணல் குணா

    இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்! திரும்பிப் பார்க்கின்றோம் – சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம்இ கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்துஇ விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள்இ எத்தனை சவால்கள்இ எத்தனை அழுத்தங்கள்இ எத்தனை குழிபறிப்புகள். எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து…… திரும்பிப் பார்க்கின்றோம் – இரத்தத்தையும், சாம்பர்மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமழனுக்குத் தந்தவர்களின் தலைவாசல்களுக்கு – ...

    Read More »
  • 20 July

    தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்

    தலைவர் பிரபாகனின் 66வது பிறந்தநாளை ஒட்டிய பதிவில் தலைவரைப்பற்றிய நினைவுப்பகிர்வுகளை காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை மாணவர்கள் வழங்குகின்றார்கள்.

    Read More »
  • 6 July

    முள்ளிவாய்கால் மண்ணில் விதையான லெப்.கேணல் அன்பழகன்

    05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ...

    Read More »
  • 6 July

    மாவீரர் பூம்பாவை

    வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும்,மனதில் கவலைகள் பெருகி குரல் வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும்.இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம்.அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும் அவர்களை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில்,ஒரு வருடத்தின் பின்போ அல்லது மூன்று,ஐந்து வருடங்களின் பின்போ அவர்களைப்பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஊமைகளாக உள்ளோம்.அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதி யுத்தத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன். 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம்.நாங்கள் அங்கு சென்றடைந்தது ஒரு இரவு 8மணி இருக்கும்.அங்கே நிறைய அக்காக்கள் பெரிய ஹோலில்(hall)எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய புத்தகங்களில் பச்சைப் பேனையை வைத்துக் கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

    Read More »
  • 6 July

    லெப்ரினன்ட் புகழினி

    புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் ...

    Read More »