“சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார்.
அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார்.
தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார்.
எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள்.
அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார்.
எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும்
அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம்
எங்களுக்கு எதிராக போராடிய இவரால் எப்படி திலீபனுக்கு பூ வைக்க முடிகிறது என்று
அதற்கு அவர் சொன்ன பதில் அவர் கூலிக்காக வந்த படியால் எமது தியாகம் பற்றி அறியாதவராக இருந்தார்.
எங்களிடம் வந்த பிறகு தான் எமது போராட்டத்துக்கு தனது பங்கும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.
அவர் மட்டுமல்ல அவரது நாயும் எங்களுடன் தான் இருக்கிறது.
இவர் பூ வைக்க மறந்தாலும் அவரின் நாய் பூ கொண்டு வந்து வைத்து விட்டுப் போகும். என்றார்.
எதிரியால் கூட விளங்கிக் கொண்ட எமது போராட்டத்தை சர்வதேசம் இன்றும் விளங்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.”
இப்பதிவு பற்றிய மேலதிக விபரங்கள் இருப்பின் உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்பிவையுங்கள் editor.eelamhouse@gmail.com