Recent Posts

November, 2020

  • 30 November

    மாவீரர் மேஜர் அல்லி

    கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை ...

    Read More »
  • 27 November

    வரலாற்று நாயகி மேஜர் சுமி

    நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது. ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில். உபமெடிசின் (sub medicine)நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து ...

    Read More »
  • 10 November

    லெப்ரினன்ட் கேணல் லக்ஸ்மன்

    ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல. வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் ...

    Read More »
  • 10 November

    மேஜர் வில்வம்

    நேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த பாக்கியம்தான். “அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “மங்கிய பொழுதுகளின் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார். “எப்பையாவது ...

    Read More »
  • 8 November

    மருத்துவப்பிரிவின் லெப் கேணல் நீலன்

    ”உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாரணமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். எனினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் ...

    Read More »