இன்று எனது அக்கா வீரச்சாவு அடைந்த நாள் 26/04/2009
எனது அக்கா வீரச்சாவடைந்தது பற்றி எனது நினைவில் பின்நேர பொழுது நான் அம்மாவும் முள்ளிவாய்களில் எமது இருப்பிடத்தில் இருக்கையில் அப்பா திருமாஸ்டர் ,திருமாஸ்டரின் மனைவி (டீச்சரும்) பதட்டமான வருகை என்னப்பா என்ன நடந்தது என்று அம்மா கேக்க அக்காவின் வீரச்சாவு செய்தியை எடுத்து வந்தனர் அனைவரும் எங்கள் குடும்பத்தில் இரண்டாவது இழப்பு 07.04.2009 அன்று எனது அண்ணா எறிகணை தாக்குதலில் மரணம் அடைந்தான் 26.04.2009 எனது அக்காவின் வீரச்சாவு எங்களுக்கு பேர் இடி அன்றைய சூழ்நிலையில் யாருக்கும் உடலை கையளிக்கும் நிலையில் இல்லை எங்கள் குடும்பம் என்றதால் வித்துடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். வித்துடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட இடத்திற்கு பின்பு புதுவை இரத்தினதுரை அவர்களின் இருப்பிடம் இருந்தது.அண்ணா அக்கா மரணத்தில் கூட ஒத்தாசையாக இருந்து அனைத்து உதவிகள் செய்ததில் எமது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களிற்கு பெரும் பங்கு உண்டு .
அன்று காலை கிபிர் தாக்குதல் தூரத்தில் நடைபெறும்போது வேடிக்கை பார்த்தவனாக நான் இருந்தேன் அந்த தாக்குதல் எனது அக்கா இருக்கும் முகாம் மீது நடத்தப்பட்டது என்பதை எதிர்பார்த்து இருக்கவில்லைதான் நான்.வித்துடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டபோது அந்த இடத்தில் புகைப்படங்களை எடுத்தவர் Amarathaas Artist பல வருடங்களின் பின்பு அவரை தொடர்பு கொண்டு அண்ணா அந்த புகைப்படங்கள் இருக்கின்றதா என்று கேட்டேன் இல்லை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நுழையும் முன் அனைத்தையும் அழித்துவிட்டேன் என்று என்று பதில் அளித்தார்.
அனைவரும்வந்து அஞ்சலி செலுத்தினர் இதில் எனது மனதில் ஆழமாக பதிந்த ஒரு விடயம் நடந்தது எங்கள் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் ஒரு தகவலை அப்பாவிடம் வந்து சொன்னார். வருகினமாம் என்று ஒரு செய்தி அப்பா ஒரு கனம் கூட தாமதிக்காமல் பதில் அளித்தார் வர வேண்டாம் என்று சொல்லுங்கள் நான் செத்தா வருவது வேறுவிடயம் எண்ட மகள் செத்ததுக்காக வரக்கூடாது வரவேண்டாம் என்று சொல்லுங்கள் என்று உறுதியாக கூறிவிட்டார் சூழ்நிலைகளும் சரி இல்லை என்று கூறிவிட்டார்.
தாங்க முடியாத வேதனைகளையும் வலிகளையும் கண்ணீரால் அழுது தீர்த்தோம் அம்மாவும் நானும் எப்போதும் தம்பி தம்பி என்றும் அன்பு பாராட்டும் அக்கா எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் முகம் மூச்சடங்கி பேச்சடங்கி கிடந்ததை பார்த்த அந்த நினைவுகள் மனதைவிட்டு அகன்று சென்றுவிடாது. அண்ணா அக்கா இருவருமே தலையில் காயப்பட்டுதான் மரணம் அடைந்து இருந்தனர்.. பின்பு வித்துடல் முள்ளிவாய்க்கால் பொதுசந்தை மண்டபத்தில் ஓர் இரவு வைக்கப்பட்டு அடுத்தநாள் முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. புலிகளின் இறுதி துயிலும் இல்லமும் அதுவே.
இந்த புகைப்படத்தில் அப்பா அக்கா நான் காணப்படுகின்றோம் புகைப்படத்தை எடுத்தவர் புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் மாமா .
பதிவு – https://www.facebook.com/share/p/1BvYvPPTKa/?mibextid=wwXIfr