Breaking News
Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / லெப்.கேணல் ஞானழகன்

லெப்.கேணல் ஞானழகன்

01/04/1995 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் தமிழீழ இலட்சியத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து மட்டக்களப்பிலிருந்து 18/04/1995 யாழ்மாவட்டம் எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்திருந்த கப்டன் ஜெயந்தன் படையணி முகாமிற்கு வந்து சேருகிறான். அதன்பின் 28/05/1995 தொடக்கம் 28/10/1995 வரை லெப்.கேணல் பொன்னம்மான் ஆரம்ப பயிற்சி 06 தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்கிறான். பயிற்சியில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டதால் சிறுத்தை படையணியிற்கு உள்வாங்கப்பட்டு சிறுத்தை விசேட கொமாண்டோபயிற்சிகளை 01/02/1996 தொடக்கம் 01/02/1997 வரை பயிற்சி [குறியீட்டு பெயர் ராதா -03] பெற்றான். இந்த பயிற்சியிலும் சிறப்பாக செயல்பட்டதால் [Jungle Leapord] காட்டுச் சிறுத்தை பயிற்சிற்கு அனுப்பபட்டான்.

அங்கு பயிற்சி பெறும் போது தேசியத்தலைவரின் நேரடி ஆளுகைற்கு உட்பட்ட படைக்கலபாதுகாப்பு அணிற்காக 1997 ஆண்டு பெப்புரவரி இறுதியில் லெப். கேணல் இம்ரான் பாண்டியன் படையணியிற்கு உள்வாங்கப்பட்டான். பார்ப்பதற்கு இளையவனாக இருந்தாலும் எல்லோருடனும் உரிமையுடன் இனிமையாக பழகும் போராளி. கொடுக்கப்பட்ட வேலைகளை சலிப்பின்றி எப்போதும் உற்சாகமாக செய்பவன் போராட்டத்தின் பின்கள பணியென்பதற்கு அப்பால் எந்நேரமும் இரகசியம் காப்பதான பணியாகவே இருந்துவந்தது. 2002 ஆண்டளவில் ஞானழகன் கடமையாற்றிய அணி படையணி விரிவாக்கத்தின் போது லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியின் ஆளுமைற்குள் வருகின்றது. சமாதான காலப்பகுதியில் வன்னியில் கடமை செய்த பல போராளிகள் தமது பெற்றோரை சந்திக்க விடுமுறையில் மட்டக்களப்பிற்கு சென்று வந்தனர் ஆனால் ஞானழகனால் மட்டக்களப்புற்கு செல்லமுடியவில்லை கடமையின் இரகசியம் அவனை மட்டு மண்ணுக்கு செல்லமுடியாமல் தடுத்தது. இருந்தபோதிலும் பெற்றோர் வந்து சந்தித்துவிட்டு சென்றனர். சமாதான காலப்பகுதியில் எமது அணியின் கடமை நிமிர்த்தம் JCB மற்றும் கனரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றது. தனது சொந்த முயற்சியில் JCB வாகனத்தை ஓட்டகற்று கொண்டான். அவன் அந்த வாகனத்தை தனது உடன்பிறப்பு போல் பாவித்துவந்தான். 2006 யுத்தம் மன்னாரில் ஆரம்பித்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் வரும்வரை அனைத்து களமுனை முன் மண் அரங்குகளிலும் ஞானழகனும் அவனது JCB யும் பணியாற்றியது. அதே நேரங்களில் எமது முகாங்களில் நிற்கும்வேளையில் ஓய்வின்றி படைக்கல பாதுகாப்பு செயல்பாடுகளிலும் ஈடுபடுவான்.

இறுதியாக முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம் அமைந்திருந்த பகுதிற்கு முன்பாக முகாம் அமைத்திருந்தோம் 14/05/2009 அன்று முள்ளிவாய்க்கால் கடல்கரை பிரதேசத்தை இராணுவம் இருபக்கத்தாலும் வந்து சந்தித்து புலிகளை இறுதி முற்றுகையை செய்தது அந்த இடத்தை விட்டு நகர்ந்து முன்னுக்கு வரும்படி கட்டளை அங்கியிருந்த போராளிகளுக்கு இரவு 10மணியளவில் வழங்கப்பட்டது அதன்படி ஞானழகன் தனது JCB வாகனத்துடன் அந்த பாதையால் 200m நகர்ந்திருப்பான் அந்த இடங்களை நோக்கி எதிரி மிக்கடுமையான எறிகணை தாக்குதலை மேற்கொண்டுயிருந்தான். மட்டக்களப்பு மண்ணிலிருந்து வந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் 14/05/2009 அன்று வீரச்சாவை தழுவினான். அவனது நண்பர்கள் அவன் நேசித்த அந்த JCBற்கு அருகிலே அவனை விதைத்தனர்.

நட்புடன் அமலன்
ராதா படையணி

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப்ரினன்ற் கேணல் பூவேந்தன்

1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு ...

Leave a Reply