1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு வேணாவில் அமைந்திருந்த புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் முகாமிலிருந்த போராளிகள் இரவு பகலாக தொடர்ந்து படைக்கலங்களை இறக்கி களஞ்சியப்படுத்தி கொண்டுயிருந்தனர். அந்நேரம் கடற்புலிகள் தங்களின் தாக்குதல் பலத்தால் சிங்கள கடற்படையை மீறி சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆயுதங்கள் அவற்றுக்கான செல்கள் ரவைகள் மற்றும் போராளிகளுக்கு தேவையான உலர்உணவுகள் உடைகள் அனைத்தையும் கொண்டுவந்தனர் அவற்றில் படைக்கலங்களை களஞ்சியப்படுத்துதல் மற்றவைகளை அதற்குரிய இடங்களுக்கு தலைமையின் கட்டளைற்கு ஏற்ப அனுப்பிவைப்பது் என்று மிகவும் குறைந்த அளவிளான போராளிகளால் இந்த பணி நடைபெற்று வந்தது. இந்த ஆட்பற்றாக்குறையை நிரப்புவதற்காக தலைவரால் அவரது பாதுகாப்பு பணியிலிருந்த திடகாத்திரமான 20 போராளிகளை அங்கு அனுப்பி வைத்தார் அந்த இருபது பேரில் ஒரு போராளி தனித்து தெரிந்தான் அவன் எல்லோரையும் விட உயரம் குறைவாக கனதியான செல்பெட்டிகளை தூக்க முடியாமல் அனைத்து போராளிகளாலும் நக்கல் கிண்டலுக்கு ஆளான போராளியாகவே படைக்கல பாதுகாப்பு அணிற்குள் வந்தான் பூவேந்தன்.
யாழ்பாணம் கோப்பாய் மண்ணில் 1978ஆம் ஆண்டு ஒரு அக்கா ஒரு அண்ணாவுற்கு தம்பியாக ஞானசெல்வன் பிறந்தான் O/L தேர்ச்சி பெற்று A/L படித்து கொண்டுயிருக்கும்போது 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பண இடப்பெயர்வுடன் வன்னி மல்லாவியில் குடும்பத்துடன் வசித்து வந்தான் அவனின் சகோதரன் 1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இணைந்திருந்தபடியால் நோயுற்ற தந்தை என்பதால் கல்வியை இடைநிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவந்து இவனே தனது குடும்பத்தை பார்த்து வந்தான்.1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளிநொச்சியை சிங்களப்படை ஆக்கிரமித்தது இதன்பின் தமிழர் ஒவ்வொரு பேரும் போராளியாக மாறினால்தான் நாம் விடுதலைப்பயணத்தில் வெல்ல முடியும் என்கிற எண்ணத்தில் தன்னை விடுதலைப்புலியாக இணைத்து கொண்டான்.
இயக்கத்தில் இணைந்த ஞானசெல்வனிற்கு பூவேந்தன் என பெயர் வைக்கப்படுகிறது. இம்ரான் பாண்டியன் படையணியின் விசுவமடு அமைந்திருந்த மாறன்-01 பயிற்சி முகாமில் ஆரம்ப பயிற்சியை பெறுகிறான்.பயிற்சி முடிந்த பின் அந்த அணியினர் ஜெயசிக்குறு களமுனைற்கு சென்று களமாடுகிறார்கள். அதன்பின் அந்த அணியினர் பின்தளம் வரவழைக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் வெவ்வேறு பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். பூவேந்தன் தலைவரின் பாதுகாப்பு அணிற்கு தேர்தெடுக்கப்பட்டு சிறப்புபயிற்சிற்கு அனுப்பப்படுகிறான் பயிற்சியின் பின் மதிவதனி அக்கா பாதுகாப்பற்கு [அதாவது தலைவரின் குடும்பத்தின்] அனுப்பபடுகிறான். பூவேந்தன் மற்றவர்கள் சாதாரணமாக யோசிப்பதற்கு எதிர்மாறாகவே யோசிப்பான் அதன்படியே செயல்படுவான் இவனின் இந்த திறமையை அங்கியிருந்தவர்களால் கவனிக்கப்பட்டு இவனை படிப்பித்தால் இன்னும் திறமையான போராளியாக வருவான் என எண்ணி ஆங்கிலம் கற்க அனுப்பப்படுகிறது அதுதான் அவனது தலையெழுத்தை மாற்றியது பூவேந்தனுக்கு சுட்டு போட்டாலும் ஆங்கிலம் வராது அதற்கு உதாரணம் O/L பரீட்சையில் ஆங்கில பரீட்சைற்கு போனால் F [fail] வரும் என்று பரீட்சைற்கு போகாமல் இருந்தவன் absent என வரட்டும் என்று மாற்றி யோசித்தவன். ஆங்கிலம் கற்க மாட்டேன் என இவன் மறுத்ததால் இயக்கம் சொன்னதை செய்யாத தால் தண்டனையாகவே இவன் படைக்கல பாதுகாப்பு அணிற்குள் வந்தான்.
ஆரம்பத்தில் கனதியான செல்பெட்டிகளை தூக்க சுமக்க மிகவும் சிரமப்பட்டான் ஆனால் அவனுக்குள் எப்போதும் ஒரு முயற்சி இருந்துகொண்டே இருக்கும் பூவேந்தனின் மாற்றி யோசிக்கும் ஐடியாக்கள் அந்த வேலைகளை இலகுவாக செய்வதற்கான உத்திகளை கண்டறியும் இவனது தனித்திறமை பொறுப்பாளரால் கவனிக்கப்பட்டு அந்த அணியின் உதவி நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறான் அந்த கடமையை சிறப்பாக செய்து நிர்வாகப்பொறுப்பாளராக பணி உயர்ச்சி பெறுகிறான் இந்த காலப்பகுதியில் சமாதானம் ஏற்பட்டு அணியிலிருந்த முக்கிய போராளிகள் படையணிற்கு சென்ற போது படைக்கல பாதுகாப்பு அணியின் சிறப்பு வேலைதிட்டத்தின் பொறுப்பாளராக பூவேந்தன் நியமிக்கப்படுகிறான் அந்த வேலையை திடகாத்திரமான போராளிகளே செய்ய முடியாமல் திணறும் போது பூவேந்தன் எப்படி செய்வான் என எல்லோரும் நினைத்த போது அதுவரை அந்த வேலை செய்த போராளிகளை விட மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் செய்யும் ஆற்றலை உருவாக்கினான். இவனது திறமைற்கு பரிசாக பீல்ட்பைக் மோட்டர்சைக்கிள் கொடுக்கப்பட்டுயிருந்தது.2006 ஆண்டு 4ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது இவர்களது கடமை இரட்டிப்பாக மாறியது சண்டை களங்களுக்கு தேவையான நேரத்தில் ஆயுதங்கள் கொடுக்க வேணும் அதே நேரம் எதிரியின் விமானதாக்குதலில் களஞ்சியங்கள் இலக்காக கூடாது என்று வன்னியின் காடுகள் முழுவதும் சிறுசிறு மறைமுக களஞ்சியங்கள் அமைத்து அவற்றை பாதுகாத்துவந்தனர்.2008 ஆம் ஆண்டு இவனுக்கு 30 வயது வந்தபடியால் தலைமைசெயலகத்தால் திருமணம் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்படுகின்றது. அதன்படி யூலை மாதம் 2008 ஆம் ஆண்டு தனது உறவினர் முறைப்பெண்ணை திருமணம் செய்கிறான் [இயக்கத்தில் ஆகஸ்ட் 2008 உடன் திருமணங்கள் நிறுத்தப்படுகிறது]
2008 செப்ரெம்பர் மாதமளவில் கிளிநொச்சி வரை இராணுவம் வந்திருந்தது அதன்பின் ஒவ்வொரு இடங்களாக இடங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் செல்லும் போது பூவேந்தனின் அணியினர் இரவு பகல் உணவு உறக்கம் ஏதும் இன்றி தொடர்ச்சியாக படைக்கலங்களை பாதுகாப்பதும் இடம்மாற்றுவதும் வினியோகம் செய்வதும் என்று இருந்தது தொடர்ந்து பின்நகர்நது இறுதி இடமான முள்ளிவாய்க்கால் மண்ணில் 13/05/2009 அன்று இரவு தலைமையிடமிருந்து இறுதி விநியோகத்திற்கான கட்டளை வருகிறது இருக்கிற பிஸ்டர்களும் அதற்கான ரவைகளையும் அனுப்பும்படி ரவைகள் பூவேந்தன் அணியினர் இருந்த இடத்திலே இருந்தது பிஸ்டல்கள் முன்னர் ஒரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது அந்த இடம் முதல் நாளிலிருந்து இராணுவத்திற்கும் புலிகளுக்கும் சண்டை நடக்கும
இடைப்பட்ட சூனிய பிரதேசம் ஆகும். இந்த இக்கட்டான சூழல் மேல் பொறுப்பாளருக்கு தெரிவிக்க அவரோ அண்ணை எடுத்து தரச்சொன்னால் அதை எடுக்கத்தான் வேணும் என கூறினார் அக்கணமே பூவேந்தன் முடிவு எடுக்கிறான் அதை போய் எடுப்போம் என்று அதன்படி ஐந்து பேருடன் நகர்கிறான் இடையில் முன் களமுனை போராளிகள் நின்றனர் அவர்கள் இதற்கு அப்பால் இராணுவம் எங்கும் நிற்கும் கவனம் என கூறினபோதும் பூவேந்தன் அணியினர் இரகசியமான முறையில் நகர்ந்து அந்த சூனிய பிரதேசத்தில் இருந்த 25 பிஸ்டல்களையும் எடுத்து வந்து தலைமை சொன்ன பிரிவிடம் கொடுத்தனர் இதுதான் புலிகள் அமைப்பில் இருப்பில் இருந்த இறுதி ஆயுதங்கள ஆகும்.
அடுத்த நாள் 14/05/2009 அன்று சிங்களப்படைகள் முல்லைத்தீவு கடற்கரையை முழுமையாக ஆக்கிரமித்து முள்ளிவாய்க்கால் மண்ணை முற்றுகைற்குள் கொண்டுவந்தனர் அனைத்து ஆவணங்களையும் எரித்து அழித்துவிட்டு பின்நகரும்படி பூவேந்தன் அணிற்கு கட்டளை வருது அதை செய்துவிட்டு பின்நகர்ந்து வந்தனர் அடுத்த நாள் தலைமையை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுயிருந்தது தலைமையின் உதவியாளர் சேந்தன் வந்து மேல் பொறுப்பாளருடன் தெரிவித்து பூவேந்தன் அணியினர் தலைமையுடன் சேர்ந்து நகர வேணும் அதற்கு ஏற்றவாறு தயார்படுத்தினார் ஆனால் 15/05/2009 பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் வீரச்சாவுடன் அந் நகர்வு தள்ளிவைக்கப்படுகிறது. 16/05/2009 அன்று பின் இரவு சேந்தன் பூவேந்தன் அணியினரை கூட்டிகொண்டு தலைமையின் இடத்திற்கு சென்றார்.17/05/2009 அன்று தலைமையை வெளியேற்றும் இறுதி நடவடிக்கையில் நந்திகடல் கரையில் அவன் நேசித்த தலைமையுடன் அந்த தலைமைக்காக அவனது எட்டு மாத கர்ப்பனி மனைவியை விட்டு தாய்மண்ணின் விடுதலைற்காக இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்தான் பூவேந்தன்.
18/05/2009 அன்று சிங்கள படையினர் விடுதலைப்புலிகளின் உடல்கள் என தொலைக்காட்சியில் காட்டினர் அதில் பூவேந்தனின் வித்துடலும் அவனது அணியினரின் வித்துடலும் இருந்தது. துன்பியல் நிகழ்வாக அவனுக்கு அருகிலே அவனது அண்ணா கிட்டு பீரங்கி படையணி தளபதி ரூபன் அண்ணாவின் வித்துடலும் ஒன்றாகவே இருந்தது.
படைக்கல பாதுகாப்பு அணிற்கு சம்மந்தம் இல்லாத ஒருவனாக வந்து இறுதியில் அந்த அணியின் முகமாகவே மாறியவன் பூவேந்தன்.
நட்புடன் அமலன்
ராதா படையணி