Home / ஆவணங்கள் / ஆவணங்கள் / தமிழீழ அடையாள அட்டை

தமிழீழ அடையாள அட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமானது. முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) அலுவல்சாராக(Officially) தமிழீழ அடையாள அட்டையினை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

 

 

 

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்ற முக்கிய தரவுகள் பொறிக்கப்பட்டு கணணிமயப் படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குறித்த ஆள்அடையாள அட்டையை தமிழீழ காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் சோதனைகளுக்கு பயன்படுத்தியாதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘ஒரு கணவன் மனைவிக்கு வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டையின் முன்பக்கமும் பின்பக்கமும்

குறித்த இரண்டு அடையாள அட்டைகளும் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போதுதவறவிடப்பட்டடிருக்கின்றது. இந்தநிலையில் ஏழு வருடங்களை தாண்டிய நிலையில் மழை, வெயிலுடன் மண்ணில் புதைந்தும் அதன் தரம் குறையாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் பற்றிய செய்தி

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 1200 இற்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தி பல மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த ...

Leave a Reply