Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கரும்புலிக்காக சென்ற கரும்புலி சின்னவன்

கரும்புலிக்காக சென்ற கரும்புலி சின்னவன்

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நாட்களில் தமிழீழப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலின் விளைவால் போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்ட சின்னவன்.தனது ஆயுதப் பயிற்சியை முடித்து மேலதிக பயிற்சி மற்றும் படிப்பிற்காக தமிழீழப் படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் படிப்பிலும் சிறந்து விளங்கிய சின்னவன்.அதன் பின்னர் கடற்புலிகளணிக்கு வந்தவன் .இங்கு வெளியிணைப்பு இயந்திரப் பிரிவிற்க்குச் சென்று அது சம்பந்தமாக
படித்தும் அவ் இயந்திரங்களை பிரித்துப் பூட்டியும் கற்றான்.அத்தோடு படகுச் சாரதிப் பயிற்சியையும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் பழகிக் கொண்டான்.தொடர்ந்து சாள்ஸ் படையணியில் உள்வாங்கப்பட்ட சின்னவன் சாளையிலிருந்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணியிலும் தென்தமிழீழத்திற்க்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் கடல் விநியோகத்திலும் பொறியியலாலராக படகின் சாரதியாக பங்குபற்றினான்.

அதுமட்டுமல்லாமல் கடற்சமர்களிலும் பங்குபற்றினான்.இந்த நிலையில் கடற்கரும்புலிகளணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அதற்கான அனுமதியை பெற்று கடற்கரும்புலிகளணியில் இணைந்து கடற்கரும்புலிப் பயிற்சிகளையும் பெற்றான்.தொடர்ந்து கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் கடற்கரும்புலி மேஐர் சிறி அவர்களுடன் கடற்கரும்புலியாகச் செல்வதற்க்கு ஒரு திறமையானவரும் நீண்ட கடலனுபவமும் உள்ள ஒருவர் தேவை அவர் யாரென சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சிந்தித்தபோது அவருக்கு வந்த பெயர்தான் சின்னவன்.ஏனென்றால் சிறி அவர்களுக்கு ஆகாயக் கடல் வெளிச் சமரில் விழுப்புண்ணடைந்து இடுப்புக்கீழ் உணர்ச்சியில்லாமல் இருந்தார்.மட்டுமல்லாமல் மிகவும் கஸ்ரப்பட்டு தலைவர் அவர்களிடம் அனுமதியைப் பெற்று தன்னை கடற்கரும்புலிகளணியில் இணைத்துக் கொண்டார். நீண்டகாலமாகவும் தன்னைக் கடற்கரும்புலிகளணியிலும் இணைத்திருந்தார்.

அவருடன் படகில் செல்வதற்க்கு திறமையானவரும் நீண்ட கடலனுபவமும் ஒரு படகின் அனைத்து விடயமும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.சகல வேலைகளும் வேகமாக செய்யத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும்.கடற்கரும்புலிகளைப் பொறுத்தவரை படகு வெளிக்கிட்டு உடனடியாக கடற்படையின் கலத்தை தாக்கி மூழ்கடிக்க முடியாது .வலிந்த தாக்குதலாகிலும் சரி விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் சரி சண்டைப் படகுகளின் தாக்குதலில் நிலைகுலைந்து நிற்க்கும் கடற்படைக்கலத்தின் மீதே கடற்கரும்புலித் தாக்குதல் நடாத்தி கடற்படைக்கலத்தை மூழ்கடிக்கமுடியும்.அதே போலத் தான் மேஐர் .

கடற்கரும்புலி கப்டன்.சின்னவன்.
நந்தகோபாலன் சுரேஸ்.
கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணம்.
வீரச்சாவு ..19.10.1997

சிறியும் கப்டன் சின்னவனும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இலக்கைத் தேடிச் செல்வதும் திருமபுவதுமாக இருந்தார்கள்.இந்த ஆறுமாதங்களும் இவர்களுக்கான இலக்குக் கிடைக்கவில்லை .இந்த ஆறு மாதமும் சிறிக்கான அனைத்து வேலைகளையும் செய்து படகின் வேலைகளையும் சிறப்பாகச் செய்தான் சின்னவன்.சின்னவனின் அர்ப்பணிப்பெண்பது கற்பனை கூட பண்ண இயலாது.

இடுப்புக்குக் கீழ் இயங்காத ஒரு உறுதியான வீரனை அவனது உணர்வுக்கு மதிப்பளித்து நீங்கள் இருங்கள் நான் எல்லாவேலையும் செய்கிறன் என்று சொல்லி செய்து முடித்த அவ் வீரனின் அர்ப்பணிப்பை என்னென்று சொல்லிவிபரிப்பது .இப்படியான ஒரு உன்னத வீரர்கள் 19.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் டோறாப் பீரங்கிப் படகை மூழ்கடித்து வீரச்சாவடைந்தனர்.கடற்புலிகளின் வரலாற்றில் முதலும் கடைசியுமாக இடுப்புக்குக் கீழ் உணர்ச்சியில்லாத ஒருவர் டோறாப் படகை மூழ்கடித்து வீரச்சவடைந்தார் என்றால் அது கடற்கரும்புலி மேஐர் சிறியாகத் தான் இருக்கும்.இதற்க்காக சின்னவன் செய்த தியாகமென்பது கற்பனையால் கூட எண்ணிப் பார்க்க முடியாது என்று கூறுவதில் மிகையாகாது.இப்படியாக எவ்வளவோ தியாகங்கள் இடம்பெற்ற போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் திகழ்கிறது.

எழுத்துருவாக்கம்…சு.குணா.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply