Recent Posts

December, 2020

  • 21 December

    சண்டைப்படகில் ஒரு பாசமுள்ள சகோதரியாக புனிதா!

    கடற்சண்டைகளில் நளாயினி படையணி இணைத்துக்கொள்ளப்பட்டபோது கடற்சிறுத்தைப் படையணியிலிருந்து நீச்சல் திறமையும்,பயிற்சிகளில் ஈடுபாட்டுத்தன்மையும் கொண்ட உறுதிமிக்க 30 பெண்போராளிகள் நளாயினி படையணிக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒருவராக வந்து சேர்ந்தவளே புனிதா. தொடக்க காலங்களில் PK LMG உடன் படகேறியவள் பின்னர் தொலைத்தொடர்பாளராக பல சண்டைகளில் எமது கடற்தாக்குதல் படகான #பரந்தாமன்_படகில் நீண்டகாலம் பணியாற்றினாள். 14 போராளிகளைக் கொண்ட எமது போர்ப்படகு பரந்தாமன் இல் புனிதா ஒரு பாசமுள்ள சகோதரியாகவே போராளிகளால் மதிக்கப்பட்டவள். ஆண்போராளிகளுக்கு ...

    Read More »
  • 21 December

    உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்)

    பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி ...

    Read More »

November, 2020

  • 30 November

    லெப் கேணல் பவான்

    புன்னகையோடு வலம் வந்த அண்ணனே தலைவனுக்கு வலு சேர்க்க அயராது உழைத்தவரே பயிற்சி ஆசிரியராகவும் அண்ணன் அண்ணி பாதுகாப்பிலும் பின்னர் கடலிலும் தளராது பணியாற்றி சரித்திரமானவரே.. மனதினில் தலைவனையும் மண்ணையும் மக்களையும் காதலையும் சுமந்தவரே.. இறுதியில் கேணல் இளங்கீரன் அவர்களுடன் ஒன்றாக மண்ணை முத்தமிட்டவரே… மறவோம் ஒரு போதும் உங்களையும் நினைவுகளையும் லெப் கேணல் பவான்.. (திலீபன்) அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம். வீரச்சாவு 19/03/2009.

    Read More »
  • 30 November

    மாவீரர் மேஜர் அல்லி

    கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை ...

    Read More »
  • 27 November

    வரலாற்று நாயகி மேஜர் சுமி

    நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது. ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில். உபமெடிசின் (sub medicine)நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து ...

    Read More »