Recent Posts

April, 2023

  • 25 April

    லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்)

    அது ஒரு சிறப்பு அணி. அதிசிறப்பு அணி. காட்டின் சருகுகள் காலில் மிதிபடும் ஓசையைக் கூட எழும்பாது பதுங்கி நகர்ந்து, பார்வையைக் கூர்மையாக்கி இரைதேடி, பொருத்தமான இலக்கை மட்டுமே வேகப் பாய்ச்சலில் பாய்ந்து தாக்குகின்ற சிறுத்தை போன்றது அந்தச் சிறப்பு அணி. தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட அதன் உறுப்பினர்களும் சிறுத்தைகளை ஒத்தவர்களே, அடித்தால், இலக்குத் தப்பாது, தப்பவிடக்கூடாது. மனிதர்களைச் சிறுத்தைகளாக்குகின்ற அந்த மாபெரும் முயற்சியில் சுதந்திரா முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த நாட்கள் அவை. ...

    Read More »
  • 21 April

    லெப்.கேணல் புரட்சிநிலா

    விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா. அவரில் நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை. 1984.12.24ல் ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன் ஒரே அருமை மகளாக கிளிநொச்சியில் பிறந்தார். பெற்றோரின் ஊக்குப்விப்பாலும் தனது ஆர்வத்தாலும் கல்வியில் சிறந்து விளங்கி புலமைப்பரிசு பரீட்சையில் சித்தியடைந்து.தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். சிறு வயதிலிருந்தே விடுதலை தொடர்பான விழிப்புணர்வும் நாடென்ற பற்றுணர்வுடனும் வாழ்ந்தவர். 1999ல் விடுதலைப்பயணத்தில் தடம்பதித்தார். ...

    Read More »
  • 21 April

    மதிப்புக்குரிய தளபதி பால்ராச்

    இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது. இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து ...

    Read More »
  • 21 April

    லெப் கேணல் கருணா

    இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான்.அங்கு மாவீரரான லெப்.கேணல் நரேஸ் அவர்களின் தலைமையில் பயிற்சிகளில் மற்றும் ...

    Read More »

August, 2022

  • 18 August

    மாவீரர் நாள் மரபாகி வந்த கதை

    இதுவொரு தனிப்பட்ட பதிவாகும். ஆவண நோக்கில் பகிரப்பட்டுள்ளது.   வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக்  குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன. அத்துடன் ...

    Read More »