Recent Posts

July, 2019

  • 16 July

    லெப். சீலன்

    “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. ஒரு ...

    Read More »
  • 16 July

    லெப். கேணல் வீரமணி

    சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் ...

    Read More »
  • 16 July

    லெப். கேணல் சந்திரன்

    உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை, மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி ...

    Read More »
  • 16 July

    லெப். கேணல் அக்பர்

    வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் ...

    Read More »
  • 16 July

    லெப். கேணல் நிரோஜன்

    கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், ...

    Read More »