Recent Posts

December, 2020

  • 22 December

    இரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்

    “ஜெயசிக்குறு” இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அத்தாக்குதல் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தேசியத் தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும், ஆலோசனைக்கும் அமைவாகவும் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப். கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110 (N.M) கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டுவரும் வேளையில் 55 (N.M) கடல்மைல் தூரத்தில் சிறிலங்கா ...

    Read More »
  • 22 December

    ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்

    ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன்தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிவவனது கையில் இருந்தது சுஊடு ஆயுதம். இந்த ...

    Read More »
  • 22 December

    உருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்

    இந்திய ராணுவம் எம் மண்ணை விட்டு போன போது, தேச விரோத சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை அள்ளி கொடுத்து விட்டு கப்பலேறியது; அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தங்கள் “வளப்புகள்” புலிகளை அழித்து விடுவார்கள் என்று? அதையும் இங்கே தங்கிய துரோகிகளும் நம்பினது தான் ஆச்சரியம்?? எதோ ஒரு குருட்டு தைரியத்திலும், வேறு வழியில்லாமலும் தமிழர் பிரதேசங்களில் முகாமிட்டிருந்தார்கள். அதில் PLOTE அமைப்பை சேர்ந்த துரோகிகள் மாணிக்கதாசன் (மாணிக்கதாசன் வவுனியாவில்,அவனது முகாமின் ...

    Read More »
  • 22 December

    படகுக்காவி (டொக் )

    அந்த நடவடிக்கை திட்டமிட்டதுதான். எதிரியின் மூர்க்கமான நகர்வால் வன்னி மண் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது. முப்படைகளின் நகர்வுகளையும் மரபணியாய் தோற்றம் பெற்றுக்கொண்டிருந்த எமது அணிகள் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தன. நாளும் எல்லைக் காவலரண்களில் வீரச்சாவுகளும், விழுப்புண் அடைபவர்களினதும் பட்டியல்கள் நீண்டுகொண்டிருந்தன. வெற்றிடங்கள் அடைக்கப்பட வேண்டியவையே. இல்லாது போனால் எதிரி எம் மண்ணை, மக்களை ஆக்கிரமித்து விடுவது தவிர்க்க முடியாது போய்விடும். வெற்றிடங்களை நிரவ தென்தமிழீழத்திலிருந்து படையணிகளை கடல்வழியாக நகர்த்துவதென்று முடிவாகிற்று. ...

    Read More »
  • 21 December

    தமிழீழ தேச மீட்புப் போராட்டத்தில் மாவீரர் கரிகாலன்

    எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை ...

    Read More »