திருகோணமலை அலஸ்தோட்டத்தை சொ ந்த இடமாக கொண்ட கப்டன் ஈழ இன்பன்
வன்செயல் காரணமாக குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று வசித்து வந்தார்
2006 காலப்பகுதியில் மாணவணாக கல்வி கற்று வரும்போது எம்மவர்களுடன் இணைந்து சில பணிகளை செய்து வந்த போது யாழில் வசிக்க முடியாத காரணத்தினால் 2007 வன்னி பகுதிக்கு தனது மாமியின் வீட்டில் வந்து வழ்நது வந்த பிரதீபன் சிறிது காலத்தில் தாயக போரட்டத்தில் இணைத்து இராதா வான்காப்பு படையணியில் பயிற்ச்சி பெற்று ஈழ இன்பன் என்னும் பெயருடன் வந்தவன் செண்பகம் சினைப்பர் அணிக்காக தெரிவாகி பயிற்ச்சி முடித்தான் இவ் அணிக்கு தளபதி எல்லாளன் அவர்களினால் தலைமை தாங்கினார்
2008ல் மன்னார் பாலைக்குழி பகுதியில் சிறிலங்க இராணுவத்தினரின் பாரிய முன் நகர்வு தாக்குதல் நடைபெற்று வந்தது இவ் இராணுவ நகர்வை தடுத்து நிறுத்த செண்பகம் சினைப்பர் அணி சிறிலங்கா இராணுவ முன் அரங்கு மற்றும் எமது முன் அரங்கு இடைப்பட்ட சூனிய பகுதியில் உருமறைப்பு செய்து நிலை கொண்டு இருந்தனர் இதனூடாக
சிறிலங்க இராணுத்தினரின் பாரிய முன் நகர்வை தடுத்து நிறுத்தி மிக திறமையாக செயற்ப்பட்டான் ஈழ இன்பன்
ஒரே நாளில் 11 சிறி லங்கா இராணுவம் சினைப்பர் தாக்குதலில் பலியெனச் செய்தி வந்தது. அந்தப் பதினொரு இராணுவம் மட்டுமல்ல அதற்கு முன்னர் வந்த அனேகர் சினைப்பர் தாக்குதல் ஊடாக இராணுவதி னருக்கு மரண அச்சத்த ஏற்படுத்த காரணமாக இருந்தான்
போராட்டத்தில் இணைத்துக் கொண்ட குறுகிய காலத்தில் மிக திறமையான சாதனை படைத்தான் இதனால்12 போராளி களுக்கு குரூப் கப்டன் ஆனான்
இவ்வாறு குறிப்பிட்ட செண்பக சினைப்பர் அணியினரை திரு.தேசியத்தலைவர் அவர்களின் நேரடி பார்வையில் செயற்ப் பட்டது வந்தமை குறிப்பிடத்தக்கது குறுகிய காலத்தில் தனக்கு ஒரு இடத்தினை தனதாக்கி கப்டன் ஈழ இன்பனாக வீரச்சாவடைந்தான் .
EelamHouse A place for Eelam history documents

