லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர்
பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார்.
ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் இங்கு எதிரிகளின் ஊடுருவல் மற்றும் எமது மக்களை எமக்கு எதிராக தயார்ப்படுத்தி அரச புலனாய்வாளர்கள் தமக்கான தகவல்களை பெற்று வரும் நிலை இருந்தது அவற்றிற்கு எல்லாம் எதிராக முறியடிப்பு புலனாய்வை மிக திறம்பட திட்டமிட்டு செயல் ஆற்றினார் அதுமட்டும் இன்றி இராணுவ கட்டுப்பாட்டிற்கு சென்று வரும் மக்களில் எதிரி புலனாய்வாளர்களால் தயார்ப்படுத்தி அனுப்புவபர்களை இனங்கண்டு அவர்கள் மீதான புலனாய்வு நடவடிக்கையை மேற் கொள்வதும் அதில் எமக்கு வேலை செய்ய கூடியவர்களை அவர்களை அடையாளப் படுத்தி எமக்கும் எதிரிக்கும் இடையிலான இரட்டை முகவர்களை தயார்ப்படுத்தி அதன் ஊடாக எதிரி புலனாய்வளர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதில் திறமையான ஆற்றல் பெற்றவர் .
இங்கு தான் ஸ்கந்தபுரம் ஆனைவிழுந்தான் பகுதியில் முதல் முதல் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் ( LRRP) அணி லெப் கேணல் கங்கை அமரன் அண்ணை மீது கிளைமோர் தாக்குதலை மேற் கொண்டனர் அவ்வாறு மிக அச்சுறுத்தல் பகுதியாக இருந்தது
இதன் பின்னரும் சலிப்படையாது மிக தீவிரமாக புலனாய்வு நடவடிக்கையை மேற் கொண்டு தொடர்புபட்ட சந்தேக நபர்களை இனங் காணப்பட்டு அவர்கள் மீதான கண்காணிப்பு,ஊடுருவல் ஊடாக தகவல் திரட்டியதுடன் சந்தேக நபர்களின் வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக ஒட்டுக்கேட்கும் இலத்திரனியல் சாதணங்களை பொருத்தி அதன் ஊடாக வாய்மூலமான உரையாடலை ஆதாரமாக பதிவு செய்து உறுதிப் படுத்தல் வேலையை செய்தமையால் சிறப்பான புலனாய்வு செயற்பாட்டை நிறுவியுள்ளார் அத்துடன் முகவர் கட்டமைப்பு போன்ற வற்றை உருவாக்கி பிரதேசத்தை பாதுகாக்க உறுதிப்படுத்தியவாறு அயராது பணியாற்றியவர்
அம்மான் அவர்களின் விருப்பத்திற்கு உரியவராக இருந்தவர் பணி ஒன்றிற்காக இந்தியா சென்று கொடுக்கப்பட்ட பணியை முடித்துவிட்டு இரண்டு வருடங்களின் பின் வன்னி பகுதிக்கு வந்தடைந்தார்.
மீண்டும் வன்னி மேற்கு பகுதிக்கான ( கிளிநொச்சி,ஸ்கந்தபுரம்,மல்லாவி) ஆகிய பகுதியை உள்ளடக்கி பொறுப்பாளராக திரு.காந்தி அண்ணை அவர்களால் நியமிக்கப்பட்டார் கிளிநொச்சி பகுதி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது காரணம் திரு.தேசியத்தலைவர் அவர்களின் போச்சு வார்த்தைக்காக நகர் பகுதிக்கு வருவது, மூத்த தளபதிகள் , நிர்வாக கட்டமைப்பு ,வான் தளங்கள் என்று பல அடங்கியிருந்தது ஓய்வின்றி புலனாய்வு பணியை செய்து வந்தவர் கிளிநொச்சி நகர் பகுதியில் எதிரிகளால் எந்த ஒரு தாக்குதலையும் செய்ய முடியாத வகையில் இருந்தது பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது அதுவும் உயர் மட்ட புலனாய்வு முக்கியஸ்தர்கள் இணைந்து முறியடிக்கப்பட்டது.
இவரின் மூத்த சகோதரியின் கணவர் கொழும்பு பகுதியில் பணி ஒன்றிற்காக சென்று தேசாபிமாணியாக தனது உயிரை தியாகம் செய்து இருந்தார் இவர்களுக்கான மாதாந்தம் கொடுப்பனவு ஒன்றை எம்மவர்களினால் வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் குறிப்பிட்ட காலத்தின் பின் சகோதரிக்கு மறு திருமணம் ஒன்றை அம்மான் அவர்களினால் நேரடியாக செய்து வைத்திருந்தார் இவ்வாறு எமது போட்டத்தை ஆழமாக நேசித அன்பு கொண்ட ஒரு குடும்பம்
இறுதி யுத்தத் களத்தில் போராட வேண்டி இருந்தமையால் புதுக்குடியிருப்பு மண்ண கண்டல் பகுதியில் சிறிலங்க இராணுவத்துடன் நேரடி மோதலில் காயம் அடைந்த இருந்த போது இராணுவத்தால் பிடிக்க முட்பட்ட போது கைக் குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
EelamHouse A place for Eelam history documents
