Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / லெப் கேணல் ஆதவன்/சித்திரன்

லெப் கேணல் ஆதவன்/சித்திரன்

லெப் கேணல் ஆதவன்/சித்திரன் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறை முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழீழ நிர்வாக அலகுகளில் ஒன்றான தமிழீழ ஆட்பதிவு திணைக்கள பணிப்பாளராகவும் இருந்தவர்.

இவர் புலனாய்வுத்துறை தாக்குதல் அணியில் இருந்த காலப் பகுதியில் சண்டை களங்கள் பலவற்றில் ஈடுபட்டு விழுப்புண் அடைந்தவர். இதன் பின்னர் அம்மான் அவர்களின் பாதுகாப்பு அணியிலும் அவரது நேரடி பணிகளை செய்து வந்தவர் இக்காலப் பகுதியில் கோம்பாவில் உள்ள முகாமில் கடமையில் நின்ற வேளை தலையில் தேங்காய் விழுந்து மருத்துவ பிரிவு மருத்துவ மனையில் இருந்து குணம் அடைந்ததும் நிர்வாகம் மாற்றப்பட்டார்.

உள்ளகப்புலனாய்வு பொறுப்பாக காந்தி அண்ணை அவர்கள் நியமிக்கப்பட்ட பின் லெப் கேணல் ஆதவன் அண்ணை அவர்கள் உள்ளகப்புலனாய்வு புகைப்பட ஆவணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய சந்தேக நபர்கள் தரவுகள், முக்கிய ஆவணங்கள் தரவுகள் கணினியில் பதிவேற்றி களஞ்சியபடுத்தல் மற்றும் அள்பங்கள் ஆக கட்டுதல் போன்ற பணிகளை மிகவும் திறம்படவும் காலங்கள் மாறும் போது அதற்கு ஏற்ப வடிவங்களை மாற்றி அமைத்தவர்.

2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளின் ஒன்று ஆட்பதிவு திணைக்களம் உள்ளகப்புலனாய்வு பொறுப்பாளரான காந்தி அண்ணை அவர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு அதற்கு லெப் கேணல் ஆதவன் அண்ணை அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கணினி மயப்படுத்தப்பட்ட அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டு இதற்கான படிவங்கள் தயாரித்தல் பெயர்பலகை பெயர் தெரிவு செய்யும் பணிகளை கேணல் தமிழேந்தி அண்ணை அவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. காரணம் அனைத்து விடயங்களும் தமிழ் வடிவம் ஆக்கபட்டடு முற்றுப் பெற்றது.

2007.01.01 அன்று தமிழீழ ஆள் அடையாள அட்டையை திரு.தேசியத்தலைவர் அவர்களுக்கு முதல் பிரதியை லெப் கேணல் ஆதவன் அண்ணை வழங்கி வைத்தார்.

அத்துடன் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டைகளில் முக்கிய தரவுகள் பொறிக்கப்பட்டு கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் முக்கியஸ்தர் குடும்பம், தளபதிகள் , முக்கிய பிரதேச மக்களுக்கும் புலனாய்வுத்துறை சோதனையாளர்களுக்கு முதல் கட்டம் வழங்கி பயன்படுத்தப்பட்டது.

காலம் சென்றாலும் வெய்யில் மழையில் கிடந்தாலும் மங்காத வகையில் நன்கு திட்டமிட்டு திரு.தேசியத்தலைவர் அவர்களின் நீண்ட கால திட்டத்தை லெப் கேணல் ஆதவன் அண்ணை அவர்கள் நிறைவேற்றினார்.

ஈழப் போரின் இறுதி நாட்களில் தீவிரமாகச் செயலாற்றி சிறிலங்க இராணுவத்தின ருக்கு எதிர் தாக்குதலின் போது வீரமரணமடைந்தார்.

(தகவல் சரி பார்க்கப்படவேண்டும்)

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப் கேணல் காந்தன்

லெப் கேணல் காந்தன் அண்ணை அவர்கள் தமிழீழ கிராம அலுவலகர்கள் ( மனிதவள அலுவலகம்) கட்டமைப்பு மற்றும் முன்னால் புதுக்குடியி ...

Leave a Reply