லெப் கேணல் நாவேந்தன்/நசீர்

லெப் கேணல் நாவேந்தன்/நசீர் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வுத்துறையில் பொறுப்பாளர்க ளில் ஒருவராக இருந்தவர்.
இவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் ,காந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் பிரதேச புலனாய்வு செயற்பாடுகளில் திறம்பட செயல்பட்டவர்
சமாதான காலப்பகுதியில் வன்னி பகுதி வந்த பண்பாட்டு நிறுவனமான (UN, UNHCR,போர் நிறுத்த கண்காணிப்பு குழு,கன்னி வெடி அகற்றும் நிறுவனம் ,ICRC ) மற்றும் அரச நிறுவனங்கள் அவற்றை தனிதனி கட்டமைப்பாக பிரிக்கப்பட்டு அவ் நிறுவனம் அதில் பணியாற்றும் நபர்களை அவர்களுக்கு தெரியாத வகையில் தரவுகளை திரட்டி அவர்கள் மீதான புலனாய்வு கட்டமைப்பு உருவாக்கி மிக திறம்பட செயல்பட்டு வந்தவர்( உயர் மட்ட நாடுகள் சந்தேகம் கொள்ளாத வகையில்)
அம்மானின் விருப்பத்திற்குரிய பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவர் இறுதிகட்ட போர் நடை பெற்று வந்த வேளை புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்தார்.
=====
துணைவியார் போராளி யாழவள்/சபீனா
======
லக்.கேணல் நசீர் அவர்கள் நிதித்துறையிலும் பணியாற்றினார் இவர் நிதித்துறையில் இருந்து தான் புலனாய்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப் கேணல் புதுவேந்தன்

லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *