லெப் கேணல் புதுவேந்தன்

லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் .
இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தன பிரதேச,மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர்களின் புலனாய்வு தகவலை மேல் நிலை பொறுப்பாளரின் பார்வைக்கும் அதற்கான பதிலை குறித்த புலனாய்வு பொறுப்பாளர்களுக்கு விரைவான புலனாய்வு தகவல் பரிமாற்றத்தின் ஊடாக நடவடிக்கைக்கு கொண்டு செல்வதில் முக்கி பணியை செய்து உள்ளக பாதுகாப்பிற்காக ஓய்வின்றி பணியாற்றிய ஒரு ஆளுமை
போராளிகள்,பணியாளர்களை பணியின் அடிப்படையில் தரப்படுத்தி பிரித்து அதன் அடிப்படையில் கற்றல் செயற்பாடுகள் , பட்டறிவு ( சந்தேக நபர்களை இனங் காணுதல், கண்காணிப்பு,ஊடுருவல் முகவர் தயார்ப்படுத்தல் ,இரகசியம் பாதுகாத்தல்) இன்னும் பல புலனாய்வு வகுப்புகளை அதற்கான மாஸ்ரர் பொறுப்பாளர்கள் ஊடாக அறிவுட்டி இன்னும் கூடிய பெறு பேறுகளை பெற்று கொள்ளவற்காக அனைத்து வழிகளையும் திறம்பட செயற்படுத்தியவர்
முக்கிய முகவர்களை மதிப்பீடு ,உறுப்பினர் பணியாளர்கள் மதிப்பீகள், விசாரணைகள் கணினி ஊடாக தகவல்களை ஆவணப்டுத்தல் புகைப்படங்கள் ஆவணப்டுத்தல் ,சம்பளப்பட்டியல், நிதி, வழங்கல் என்று பல பணிகளை தவறு விடாது திறம்பட செய்து வந்ததால் அம்மானின் விருப்பத்துக்குரியவராக இருந்தார்
இறுதி கட்ட போரிற்க களமுனை செல் வேண்டி இருந்தமையால் புதுக்குடியிருப்பு மண்ணகண்டல் பகுதியில் இராணுவத்தினருடன் நேரடி மோதலின் போது காயமடைந்து இருந்த நிலையில் இராணுவம் பிடிக்க முற்பட்ட போது கைக் குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *