கப்டன் இளங்கோ

” இரத்தெவறி கொண்ட பழிவாங்குதல்களின் துயரமானது அமைதியும் அற்பணிப்பும் மிகுந்த தியாகங்களின் வீரமாகிறது” வீரத்துடனும் தன்னலமறுப்புடனும் முன் முயற்ச்சி உணர்வுடனும் வெடிமருந்தும் வியர்வையும் சேர்ந்த புரட்சியின் வாசனத்தினை நுகர்ந்த தேசத்திலே சாகசங்களின் மனிதனாக கப்டன் இளங்கோ.
இவன் எப்பொழுதும் சகபோராளிகளோடு சேர்ந்து செயலூக்கம் மிகுந்த செயற்பாடுகள் பற்றி சளிக்காமல் பேசுவான்.அதற்கேற்றால் போல் ஆற்றல் மிகுந்த ஆளுமையுள்ள போர்வீரன்.விசயஞானத்துடனும் புரிந்துகொள்உணர்வுடனும் செயற்படும் இவன் மன உறுதிப்பாட்டால் எதையும் தாண்டமுடியும் என்பதை வெளிபடுத்தியிருக்கின்றான்.
இவனுடைய செயற்பாடுகள் அனைத்தையும் எழுத்தில் எழுதவும்முடியாது வெளிப்படுத்தவும் முடியாது.தனக்கென கொடுக்கப்பட்ட பணிகளை ஏற்று திறம்படச் செயற்பட்டு இருந்தான்.அவனைபற்றி கட்டளை தளபதி அவர்கள் குறிப்பிடும் போது “அவனது நொடு நொடுப்புக்கு அவன் போனால் நிறைய செய்திருப்பான்”என்று கூறுவார்.
இளங்கோ இராணுவ வலையத்துக்குள் ஊடுருவும் முயற்ச்சியில் தன்னையே இந்த நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டான்.

 

இவன் ஒரு நாள் யாழ்குடா நாட்டின் ஒரு பகுதியில் கிளைமோர் தாக்குதலை நடாத்துவதற்க்காக சென்றவேளை அதனுடன் சம்மந்தப்பட்ட சில உபகரணங்களுடன் இராணுவத்தில் பிடிபடுகின்றான் அப்போது அவன் கையில் வெப்ப அதிர்வுகடத்தி றோல் ஒன்று இருந்தது. அதனை கண்ட இராணுவம் இளங்கோவின் கையில் இருந்து வாங்கி அது பற்றி விசாரிக்க தொடங்கினான். எந்த வித சலனமும் இன்றி இயல்பாகவே தன்னுடைய மதியூகத்தால் தன்னை தற்காத்து இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்டுத் தப்பிக்கொள்ளுகின்றான்.இளங்கோவின் திறமைக்குச் சான்றாக இவ்வாறான பல செயற்பாட்டுகளை கூறலாம்.

இவன் இராணுவ வலையத்துக்குள் சென்று வேவு பார்த்து அது தொடர்பான தகவல்களை சேகரித்து தன்னுடைய பணியை மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செய்திதுமுடித்திருந்தான். இவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல இராணுவ முகாம்கள் அடிவாங்கி பல படையினர் இழப்பதற்க்கு காரணமாக இருந்தான்.
இவ்வாறாக இளங்கோ மேற்கொண்ட சில முக்கியதுவம் வாய்ந்த தாக்குதளாக.
●○யாழ் தென்மராட்ச்சி மட்டுவில் பகுதியில் ரோந்து சென்ற இராணுவம் மீதான கிளைமோர் தாக்குதல் – இத்தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்ட்டார்கள்.
●○யாழ் தென்மராட்சி கண்டிவீதியில் றோந்து சென்ற வாகனதொடரணி மீதான கிளைமோர் தாக்குதல்- இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டு ஆறு இராணுவத்தினர் காயம்மடைந்தார்கள்.ரோந்தில் ஈடுபட்ட இரண்டு இராணுவ பஸ் வண்டிகளும் சேதமடைந்தன.
●○யாழ் தென்மராட்சியின் பிறிதொருமுகாமிற்க்கு எறிகணைகள் ஏவுவதற்க்கு எறிகணை சூட்டுதிருத்தம் செய்து அவ் முகாமிலிருந்து எமதுபகுதியை நோக்கி வேலைசெய்த பீரங்கிகளை வேலைசெய்யாமல் தடுத்தான், அவ்வாறு இராணுவமுகாமொன்றின் மீது ஏவுகணை சூட்டுதிருத்தம் மேற்க்கொள்ளும் போது இளங்கோவை கண்டு இராணுவத்தினர் சுற்றிவளைத்த போதும் அவர்கள் மீதும் எறிகணை சூட்டுதிருத்தம் செய்தும் தப்பித்து வெளியில் வந்தான்.
●○இதே போன்று யாழ் குடாநாட்ற்குள் உள்ள பிறிதொரு முகாம் ஒன்றின் மீது எறிகணை சூட்டுதிருத்தம் மேற்கொண்டு வந்த வேளை இராணுவத்தின் பதுங்கிதாக்கும் அரணுக்குள் சென்று சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்டுகின்றான். இப்போது தப்பமுடியாது என சூழ்நிலையை புரிந்துகொண்ட இளங்கோ துணிச்சலாக முடிவெடுத்து இளங்கோவும் இளங்கோவுடன் சென்ற போராளிகளும் தங்களிடம் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியாலும் கைகளாலும் தாக்குகின்றனர். இதன்போது ஒரு போராளி வீரச்சாவடைய இளங்கோ காயத்துடன் நிலத்தில்விழ இராணுவத்தினர் இளங்கோ செத்துவிட்டான் என நினைத்து விட்டு விட்டுப் போக செத்தவன் போல நடித்த இளங்கோ இராணுவத்தினர் அவ்விடத்தை விட்டு அகன்றதை உறுதி செய்த பின் இளங்கோ தோளிலும் உள்ளம் கையிலும் பெரிய காயங்களுடன் தனிமையிலே தப்பி வந்தான்.இவ்வாறு சாவை அண்மையில் சந்தித்து வந்தவன் இளங்கோ.அவனை சாதாரணமாக எடைபோடமுடியாது
பழகுவதிலும் பேசுவதிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை உணர்ந்து முடிவெடுத்து
செயற்படுவதிலும் தனித்துவமான திறமையைக்கொண்டு இருந்தான்.
வெடிமருந்து கையாள்கை தொடர்பான கற்க்கை நெறியினை கற்று தமிழிழ தேசிய தலைவரிடம் சான்றுதல்களையும் பெற்றுக்கொண்டான். இளநிலை அதிகாரி பயிற்சி நெறியினையும் நிறைவு செய்து அதற்க்கான சான்றுதழ்களையும் பெற்றுக்கொண்டான.
இளங்கோ காயமடைந்திருந்த வேளையிலும் கூட தனக்கேற்பட்ட அந்த காயத்துடன் ஒரு மாத காலமும் எதுவித சிகிச்சையும் இன்றி யாழ்குடா நாட்டின் பல பகுதிகளில் நின்று தன்னுடைய வலியை விஞ்சிய வலிமையோடு ஒரு மாத காலத்தின் பின்பே இராணுவ முன்னரங்கால் ஊடுருவி தளம் திரும்பி சிகிச்சை பெற்றான். தன்னுடைய காயங்கள் மாறிய பின் தான் செய்த பணியினை தொடரவென “தசையினை தீ சுடினும் கொண்ட என் திசையினை மறக்கிலேன்” ஒரே சிந்தனை வெற்றிக்கு அவசியமானது. என்பதை உணர்ந்த இளங்கோ விடா முயற்சியாக முக்கியமான வேலை ஒன்றுக்காக வடமராட்சி கடல் வழியாக அனுப்ப படுகின்றான் கடல் கடந்து சென்று இராணுவத்தின் முன்னரங்குக்குள் ஊடுருவும் போது இராணுவம் இவர்களை நோக்கி துப்பாக்கியால் இராணுவம் சுடும்போது கடலுக்குள் தப்பித்து ஓடுகின்றார்கள் இதன் போது இளங்கோவுடன் சென்ற போராளி காயமடைகின்றான். இவ் வேளையில் இளங்கோ அவ் போராளியை கைகளால் பிடித்தவாறு கடலுக்குள் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்கு மேலான கடல்பயணத்தினை மேற்கொண்ட வேளை 23/04/2007 கப்டன் வதனன் உடன் கடலில் வீரகாவியமானன்.
இவர்களின் வீரச்சாவை கேட்டு அனைவரும் திகைத்துப்போனோம். அப்படி தான் இளகோவை உணவளித்து ஆதரித்த மக்களும் உணர்ச்சி ததும்ப கூறியிருக்கின்றார்கள். “என்னுடைய சாவினால் ஈழம் சுகந்திரமடையுமானால் இக்கணமே நான் அந்த சாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்றும் மக்களினுடைய இந்த வேட்க்கை விரைவில் ஈழம் மீட்க பேருதவியாக இருக்குமென உறுதியாக நம்பினான். அதற்காகவே யாழ் நோக்கி சென்றான். இவனது இழப்பானது இவ்வாறு கூறிய மக்களுக்கு ஏமற்றத்தை தந்தது. இன்றும் மக்களுடன் இணைந்து அதனுடைய இலட்சியத்தை நோக்கி இன்றும் தொடர்கின்றனர் சக போராளிகள். “தன்னுயிர் தானற பெற்றானே அவனை மணணுயிரெல்லாம் தொழும்”
எனவே நாமும் இவனுடைய பாதையில் இவன் விட்டுசென்ற பணிக்காக வெந்ததை தின்று விதி வந்தால் செத்துப் போகும் சத்தமற்ற வாழ்வை வெறுத்து மனித குல முன்னேற்றமெனும் மகத்தான இலட்சியத்திற்காக வீரச்சாவை தழுவிக்கொண்ட சத்தியத்தின் சாட்சியாக மன வலிமையின் நெருப்பாக இமாலய சக்தியின் ஊற்று …

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

மேஜர் செஞ்சேரன்

செஞ்சேரா…(சுந்தரலிங்கம் அகிலன்)நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *