லெப் கேணல் பிரசன்னா/ஜீவா

லெப் கேணல் பிரசன்னா/ஜீவா அண்ணை அவர்கள் மல்லாவி பாண்டியன்குளத்தை சொந்த இடமாக கொண்டவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் உள்ளகப்புலனாய்வு முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இவர் வன்னி மேற்கு (ஸ்கந்தபுரம்,மல்லாவி மாங்குளம், கிளிநொச்சி ) ஆகிய பிரதேசங்களை ஒருங்கிணைத்த உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர்.

இக்காலத்தில் உள்ளகப் புலனாய்வு பொறுப்பாளராக பிரிகேடிய மாதவன் மாஸ்ரர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் இவரின் செயற்பாடு இருந்தது. மிகவும் திறம்பட இரவு பகல் பாராது ஓய்வின்றி பணியாற்றிய ஆளுமை.

இவர் அம்மான் அவர்களினதும் தேசியத் தலைவர் அவர்களினதும் நம்பிக்கையைப் பெற்று விளங்கினார். இதன் அடிப்படையில் இவரது ஆளுமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை கவனித்த தேசியத் தலைவர் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கீழ் பொதுமக்கள் தொடர்பு பிரிவை உருவாக்கி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய தளபதிகள் பொறுப்பாளர் போராளிகள் செயற்பாடுகள் தகவல்கள் திரட்டப்பட்டு, அவற்றை தேசியத்தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

இவர் முகமாலை, ஜெயசிக்குறு போன்ற பல சண்டைக்கள நாயகனாக இருந்து உடல்களில் காயங்களை தாங்கியவர். அத்துடன் களப்பணிக்கு அப்பால் கால்ப்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களில் சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.

ஈழப்போரின் இறுதிக்கட்ட நாட்களில் முள்ளிவாய்க்கால் களத்தில் தீவிரமாக செயற்பட்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இவர் வீரமரணம் அடைந்தார்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *