மாவீரன் நளன் அண்ணை அவர்கள் மன்னார் முழங்காவிலை சொந்த இடமாக கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளகப் புலனாய்வுதுறை முக்கிய பொறுப்பாளர் களில் ஒருவர்.
இவர் மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 1986 இல் லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட படையணியுடன் 1988.89,90 காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு இந்திய இராணுவம் தாயக பகுதியில் இருந்து வெளியேறிய பின்னர் 1990ல் மன்னார் மாவட்ட படையணியில் இருந்து புலனாய்வுத்துறைக்கு தெரிவு செய்யபட்டு இருந்தார்.
1990ம் ஆண்டு காலப் பகுதியில் மன்னார் பெரு நிலப்பரப்பு மற்றும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த மடு பிரதேசம் ஆகிய பகுதியில் புலனாய்வு பணிகளையும் சமூகக் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்ட ஒரு ஆளுமை.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் அம்மான் அவர்களின் வழிகாட்டலில் ஊடான புலனாய்வு கல்லூரியின் ஆரம்ப பயிற்சியாளர்களை தனது பிரிவில் இணைத்து மன்னார் மாவட்டத்தில் தேசப் பாதுகாப்புச் சாவால்களை எதிர் கொண்டார். இவரின் தலைமையின் கீழ் மாவீரன் மேஜர் வில்வம் உள்ளிட்ட முக்கிய போராளிகள் மன்னார் மாவட்ட உதவி புலனாய்வு பொறுப்பாளர்களாக பணியாற்றினர்.
1998.06 மாத காலப் பகுதியில் புலனாய்வுத் துறை பொறுப்பாளர்கள் களமுனை பகுதிக்கு சென்று வரவேண்டும் இதன் அடிப்படையில் மன்னார் சிறாட்டி குளம் பகுதியில் எமது முன் அரங்கு பகுதியில் நின்றார்கள் இதன் போது தான் லெப் கேணல் இசைவாணன்/ பட்டேல் அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்ததார். இதனை தொடர்ந்து வோட்ட ஜெற் , ஜெயசிக்குறு ஆகிய இராணுவ நடவடிக்கைக்கு எதிரான பதில் தாக்குதல் நடவடிக்கையில் சண்டை களத்தில் நளன் அண்ணை அவர்களும் பங்கு பற்றி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
சமாதான காலங்களிலும் அதற்கு முன்னரும் மன்னார் பகுதியில் காவல் துறையின் கட்டமைப்பு முழுமையாக விரிவாக்கப்படாத சூழலில் குற்றங்களை தடுத்துப் பாதுகாப்பைப் பேணுவதில் இவரது புலனாய்வு கட்டமைப்பு முக்கிய பங்காற்றியது.
உள்ளகப்புலனாய்வு பொறுப்பாளர்களாக இருந்த பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் , பிரிகேடியர் கபிலம்மான் , காந்தி அண்ணை அவர்களின் கீழ் வன்னி கிழக்கு மேலாளராக நளன் அண்ணை அவர்கள் நியமிக்கப்பட்டார். வன்னி கிழக்கு பகுதிகளான புதுக்குடியிருப்பு , முல்லைத் தீவு , விசுவமடு , வெற்றிலை கேணி , கட்டைக்காடு , ஒட்டுசுட்டான் , நெடுங்கேணி ஆகிய பகுதிகள் உள்ளாக்கப்பட்டு இருந்தன.
இப்பகுதியில் முக்கிய தளங்கள் அமைந்து இருந்தமையால் எதிரி புலனாய்வாளர்கள் மிகத் தீவிரமாக ஊடுருவல் நடவடிக்கைகளையும் மற்றும் LRRP அணியினரின் நடமாட்டம் கடுமையாக இருந்தது. இதன் காரணமாக கடுமையான முறியடிப்பு புலனாய்வு நடவடிக்கையை அதி தீவிரமாக மேற் கொண்டவர்.
அத்துடன் கண்காணிப்பு கட்டமைப்பு , முகவர் கட்டமைப்பு , தகவல் சேகரிப்பு கட்டமைப்பு , ஊடுருவல் கட்டமைப்பு , தொழில் நுட்ப கட்டமைப்பு , LRRP அணி மீதான முறியடிப்பு கட்டமைப்பு இவ்வாறான பல புலனாய்வு கட்டமைப்புகளை உருவாக்கி ஓய்வின்றி உழைத்தவர்.
பொறுப்பாளர்,போராளிகள் , பணியாளர்கள் , முகவர்களுக்கான புலனாய்வு கற்றல் செயற்பாடுகளையும் , உலக நாடுகளின் புலனாய்வு ஆங்கில படங்களை( தமிழாக்கம் செய்யப்பட்டது ) புத்தகங்கள் ,பட்டறிவு போன்ற வற்றை மேலும் கற்க வைத்து திறமையான புலனாய்வாளர்ளாக உருவாக்கினார்.
2008 காலப் பகுதியில் உள்ளகப்புனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நளன் அண்ணை அவர்கள் ஈழப் போர் இறுதி வரை மிகவும் தீவிரமாக ஓய்வின்றி உழைத்தவர். முள்ளிவாய்க்கால் அண்மிக்கும் முன்னர் வரி உடை அணிவதை இயக்கம் தடை செய்தது. பல காரணங்கள் இருந்தது. இதனை அறியாத இலங்கை அரசுடன் இயங்கி கருணா குழு முள்ளிவாய்கால் பகுதிக்குள் வரி உடையுடன் ஊடுருவி மக்கள் மீது தாக்குதலை நடாத்தி மக்களை குழப்பியது. இவ்வாறான ஊடுருவிய நபர்களை இனங்கண்டு கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இதன் போதும் போர்களத்து புலனாய்வாளனாக மாறினான்.
முள்ளிவாய்கால் மண்ணில் இறுதி வரை போராடியவர் இறுதி கணம் தனது கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு வீரமரணமடைந்தார்.
