Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 (page 4)

மாவீரர் 2009

லெப் கேணல் பவான்

புன்னகையோடு வலம் வந்த அண்ணனே தலைவனுக்கு வலு சேர்க்க அயராது உழைத்தவரே பயிற்சி ஆசிரியராகவும் அண்ணன் அண்ணி பாதுகாப்பிலும் பின்னர் கடலிலும் தளராது பணியாற்றி சரித்திரமானவரே.. மனதினில் தலைவனையும் மண்ணையும் மக்களையும் காதலையும் சுமந்தவரே.. இறுதியில் கேணல் இளங்கீரன் அவர்களுடன் ஒன்றாக மண்ணை முத்தமிட்டவரே… மறவோம் ஒரு போதும் உங்களையும் நினைவுகளையும் லெப் கேணல் பவான்.. (திலீபன்) அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம். வீரச்சாவு 19/03/2009.

Read More »

மாவீரர் நிசாம் / சேரன்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடி 2009 மே18 இற்கு பிறகு மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்ட வரலாறு அளப்பரிய தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் கொண்டது.எமது மாவீரச் செல்வங்கள் வியப்புமிக்க மகத்தான வீரகாவியங்களைப் படைத்தனர்.அந்த மகத்தான மாவீரர்களின் இலட்சிய வெறி கொண்ட இரத்தத்தினால் எழுதப்பட்டது தான் எமது வீரம் செறிந்த போராட்ட வரலாறு.அவர்கள் தமது மக்களுக்காகவே இரத்தம் சிந்தினார்கள்,மக்களுக்காகவே மடிந்தும் போனார்கள்.மக்கள் என்ற புனித ஆலயத்திற்கு தமது உயிர்களை காணிக்கையாக ...

Read More »

கேணல் தமிழ்ச்செல்வி

“அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு மனசுவந்திச்சு…. அதுவும் உங்கட சொந்த தங்கச்சிக்கு ஒரு பச்சை மண் குழந்தை இருந்திருக்கு நீங்க அதப்பற்றி ஒரு நாள் கூட சொல்லவே இல்லையம்மா… ஏனம்மா… உங்களுக்கு உங்கட தங்கச்சி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையாம்மா…, தமிழ்ச்செல்வி வீரச்சாவு அடைந்த பிறகு அவான்ர குழந்தையை நீங்களும் கைவிட்டுட்டுவந்திட்டீங்களேயம்மா… அந்தப்பிள்ள என்னம்மா செய்திருக்கும்… ஏனம்மா நீங்க இவ்வளவு நாளும் ...

Read More »

கேணல் வீரத்தேவன்

மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா ...

Read More »

கேணல் கீதனுடன் ஒரு உரையாடல்

கேணல் கீதனுடன் ஒரு உரையாடல் .! கார்த்திகை 2005 , எரிமலை கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனைகளில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு கணக்கும் கதைகளைச் சுமந்துதிரிகிறவர். விடுதலைப் போராளிகளின்இடத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளர்ந்து வருகிறதாக சொல்கிறார். கலைஇலக்கியச்செயற்பாடுகள் மூலமும் தாம் சமூக ...

Read More »

கேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….

“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப் புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார ...

Read More »

நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற ...

Read More »

இசைப்பிரியாவை இசையருவி ஆக்கியவர்!

பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நேர்காணலிலிருந்து… என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து “தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?’ என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம். அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப் பாளர்கள், “அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை ...

Read More »

லெப். கேணல் சுடரன்பன்

முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான் கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். ...

Read More »