Home / மாவீரர்கள் (page 17)

மாவீரர்கள்

முள்ளிவாய்க்கால் முற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட,தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். முள்ளி வாய்க்கால் முற்ற வளாகம் தஞ்சாவூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளார் கிராமத்தில் 1.75-ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விளார் ...

Read More »

விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்

இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ” நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….” ” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ” அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , ...

Read More »

பிரிகேடியர் ஆதவன்/கடாபி

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே ...

Read More »

கப்டன் றெஜி

21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் ...

Read More »

லெப். சங்கர்

02.07.1982 இரவு ..! “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும் பயங்கரமாக்கியது. எம்மைச் சூழ கற்கள் மழைபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சங்கரும் நானும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே இருந்தோம். 05-06-1974 அன்று.! கோப்பாயில், அரச வங்கி ஒன்றில் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக சிவகுமாரனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றிருந்தனர். அந்த முயற்சி ஏனோ ...

Read More »

லெப். செல்லக்கிளி அம்மான்

செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் ...

Read More »

கப்டன் பண்டிதர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது. அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை ...

Read More »

கப்டன் லிங்கம்

யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 33ம் ஆண்டு ...

Read More »

கப்டன் ரஞ்சன் (லாலா)

” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் ...

Read More »

வீரவேங்கை ஆனந்

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் ...

Read More »