Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப்டினன்ட் கேணல் நீலன் – துரோகத்தால் வீழ்ந்தவன்

லெப்டினன்ட் கேணல் நீலன் – துரோகத்தால் வீழ்ந்தவன்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன. இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் ஆவார்.

சீனித்தம்பி சோமநாதன் எனும் இயற்பெயரையும் மட்டக்களப்பு ஆரையம்பதியை சொந்த இடமாகவும் கொண்டவர். தமிழ் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் தலமையின் மேல் அவர் கொண்டிருந்த அழியாததும் அசைக்க முடியாததுமான விசுவாசம் அவர் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்தபோதும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடலை விதைக்கவைத்தது.

இன்றைய நாள் லெப்டினனட் கேணல் நீலன் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்தும் ஒரு நாள் ஆகும். தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் இன்றை நாளில் நீலன் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகின்றோம்.

விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழினத்திற்கும் அவமானத்தை தேடித்தந்த மாபெரும் அழுக்காக, மறையாத கறையாக, களையாக, இருந்து வரும் சிலர் தங்கள் வரலாற்று தவறுகளையும் தங்களின் குற்றங்களையும் கழுவ மாவீரர்களின் குருதியை பாவித்தமை என்றும் அழியாத சுவடு ஆகும்

அவ்வாறான ஆயுதத்தின் வெந்தணலில் அகப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள். அவர் மட்டும் அல்லாமல் வேறு பல போராளிகளும் இந்த சுழியில் அகப்பட்டுக்கொண்டார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.
இவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்

என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும். கனவு நனவாகும்
விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள்

புலிகளின் முக்கியஸ்தர் நீலனின் படுகொலையில் துலங்கும் உண்மைகள்.

01.03.2004 அன்றிலிருந்து கருணாவால் தடுத்துவைக்கப்ட்டிருந்த லெப்.கேணல் நீலன் அவர்களை கருணா தப்பி ஓடும்வேளை கருணாவின் மருதம் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் பிரத்தியேகமான சந்திப்புக்கென 01.03.2004 அன்று மீனகம் முகாமிற்கு கருணாவிடம் அழைக்கப்பட்டிருந்தனர்.

மீனகம் முகாமிற்கு கருணாவால் அழைக்கப்பட்ட மேற்படி போராளிகள் நேரடியாக விசாரிக்கப்பட்டிருந்ததுடன் நீலன் அவர்கள் 01.03.04 அன்றிலிருந்தே சக போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

12.04.04 அன்று காலை துரோகி கருணா தப்பி ஓடுவதற்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார். அங்கு அவரைச் சுட்டு விட்டே கருணா தப்பியோடியுள்ளான்.

அதன் பின்னர் 13.04.04 அன்று மருதம் முகாமில் தேடுதலை மேற்கொண்ட போது நீலன் அவர்களின் வித்துடல் கண்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டு எடுக்கப்பட்டது.

30594864_461715747582602_4519555654213435392_n

லெப்.கேணல் நீலன்
சீனித்தம்பி சோமநாதன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
பொறுப்பு: மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்
நிலை: லெப்.கேணல்
இயக்கப் பெயர்: நீலன்
இயற்பெயர்: சீனித்தம்பி சோமநாதன்
பால்: ஆண்
ஊர்: ஆரையம்பதி, மட்டக்களப்பு
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 28.12.1966
வீரச்சாவு: 12.04.2004
நிகழ்வு: மட்டக்களப்பு கருணா கும்பலின் செயற்பாட்டின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply