Home / மாவீரர்கள் (page 12)

மாவீரர்கள்

லெப் கேணல் பார்த்தீபன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ மரபுப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் முக்கிய தளபதியும்,கவச வாகனப் பொறுப்பாளருமான லெப் கேணல் பார்த்தீபன் அவர்களின் வீரவரலாற்று நினைவுகள்…! “நடராஜா மகேஸ்வரன்” [திருநெல்வெலி யாழ்ப்பாணம்] வீரப்பிறப்பு-1972-10-09 வீரச்சாவு -2006-08-13 தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் பூர்வீக இருப்பிடமாகக் கொண்ட இவரது குடும்பம் பதின்மூன்று சகோதரர்களைக் கொண்டவன் தான் மகேஸ்வரனான பார்த்தீபன்.பத்தாவது புதல்வனான இவன் குகா என்று வீட்டில் செல்லமாக ...

Read More »

விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் ...

Read More »

புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு

1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்கவேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை ...

Read More »

கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்!

போர்க்களத்தில் ஒரு போர்வீரனின் உளவுரணைச் சிதைப்பது அவனருகில் காயத்திற்குள்ளான போர்வீரனுக்கு சிகிச்சையளிக்காமல் அப்போர்வீரன் துடித்துக்கொண்டிருப்பதுதான். ஏனெனில் தனக்கும் இதேகதிதான் என அப்போர்வீரனின் மனதில் எழும் உணர்வே அவனைத் தொடர்ந்து போராடுவதற்கான துணிவை இல்லாதொழிக்கும். இது போர்க்களங்களில் இயக்கம் கண்டறிந்த போரியல் உண்மை. ஒரு நாட்டின் இராணுவமே தனது படைநடவடிக்கைகளில் காயத்திற்குள்ளாகும் இராணுவத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு விடுதலை இயக்கமாக எந்தவொரு நாட்டின் உதவிகளுமின்றி ...

Read More »

சண்டைப்படகில் ஒரு பாசமுள்ள சகோதரியாக புனிதா!

கடற்சண்டைகளில் நளாயினி படையணி இணைத்துக்கொள்ளப்பட்டபோது கடற்சிறுத்தைப் படையணியிலிருந்து நீச்சல் திறமையும்,பயிற்சிகளில் ஈடுபாட்டுத்தன்மையும் கொண்ட உறுதிமிக்க 30 பெண்போராளிகள் நளாயினி படையணிக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒருவராக வந்து சேர்ந்தவளே புனிதா. தொடக்க காலங்களில் PK LMG உடன் படகேறியவள் பின்னர் தொலைத்தொடர்பாளராக பல சண்டைகளில் எமது கடற்தாக்குதல் படகான #பரந்தாமன்_படகில் நீண்டகாலம் பணியாற்றினாள். 14 போராளிகளைக் கொண்ட எமது போர்ப்படகு பரந்தாமன் இல் புனிதா ஒரு பாசமுள்ள சகோதரியாகவே போராளிகளால் மதிக்கப்பட்டவள். ஆண்போராளிகளுக்கு ...

Read More »

உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்)

பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி ...

Read More »

லெப் கேணல் பவான்

புன்னகையோடு வலம் வந்த அண்ணனே தலைவனுக்கு வலு சேர்க்க அயராது உழைத்தவரே பயிற்சி ஆசிரியராகவும் அண்ணன் அண்ணி பாதுகாப்பிலும் பின்னர் கடலிலும் தளராது பணியாற்றி சரித்திரமானவரே.. மனதினில் தலைவனையும் மண்ணையும் மக்களையும் காதலையும் சுமந்தவரே.. இறுதியில் கேணல் இளங்கீரன் அவர்களுடன் ஒன்றாக மண்ணை முத்தமிட்டவரே… மறவோம் ஒரு போதும் உங்களையும் நினைவுகளையும் லெப் கேணல் பவான்.. (திலீபன்) அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம். வீரச்சாவு 19/03/2009.

Read More »

மாவீரர் மேஜர் அல்லி

கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை ...

Read More »

வரலாற்று நாயகி மேஜர் சுமி

நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது. ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில். உபமெடிசின் (sub medicine)நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து ...

Read More »

லெப்ரினன்ட் கேணல் லக்ஸ்மன்

‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல. வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் ...

Read More »