2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன். தொடர்ந்து படைய அறிவியல் பிரிவிற்க்கு சென்றான்.
அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான் . இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான்.அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான்.
அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான்.அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான்.தரைத்தாக்குதலுக்கேற்றமாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு , எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான்.அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான்.
கடற்புலிகளின் தரைத்தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத்தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத் தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான். சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன் . 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவடைகிறான்.
எழுத்துருவாக்கம்…சு.குணா.