Home / ehouse (page 6)

ehouse

உறுதியின் வடிவம்

அம்பாறையில் நிந்தவூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் செல்வன் பொறிவெடி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தவருதலான ஒரு வெடிவிபத்தின்போது தன் இரு கைகளையும் – இரு கண்களின் பார்வையையும் இழந்தவர். தற்போதைய நிலையில் ( 1992 காலப்பகுதி ) வட – தமிழீழத்தின் பல பகுதிகளில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருக்கும் அவரை , உங்களுக்கு அறியத்தருகின்றோம். விடுதலையின் சுவடாக ….. 1985 ” என்ரை காலை எடுத்துப்போட்டினம் அண்ணை ” ...

Read More »

தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல்

அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக ...

Read More »

களத்தில் ….

இனப்பற்று ஆனையிறவுச் சமரில் ஈடுபட்ட பெண் போராளிகளை , கலை பண்பாட்டுக் கழக தலைமையகத்தில் கலைஞர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சண்டை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கதைத்து முடித்தபின் – ஒரு நிலையில் …. ஒவ்வொரு போராளியாக அவர்களை இயக்கத்துடன் இணையவேண்டும் என்ற என்ணத்தை விளைவித்த காரணிகளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சூரியா என்றொரு பெண் போராளி , தனது தலையையும் , கையையும் அடிக்கடி அசைத்தபடியே ...

Read More »

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் ...

Read More »

இராணுவவீரன் காதலிக்கு வரைந்த மடல்…!

இது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம், அன்று ஓர் இராணுவ சண்டைக்கு திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தருணம் இராணுவ கட்டளை தளத்திற்குள் ஊடுருவி விடுதலைப்புலிகள் தாக்கி அழித்த வேளை அந்த இராணுவ அதிகாரியின் சீருடையில் இருந்த காதலிக்கு வரைந்த மடல் … என்றும் எனக்குள் அழியாத காதலிக்கு….! இதுதான் நான் உனக்கு கடைசியாய் எழுதும் கடிதம் என நினைக்கிறேன். இனிமேல் உன்னை சந்திப்பது என்பது நிட்சயம் அல்ல… ஏனென்றால் எங்களின் ...

Read More »

புரியாத புதிர்

முல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம். நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன. அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன. தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக ...

Read More »

மாவீரனின் மகிமை

யாழ்மண்ணில் பாதை திறந்த வேளை மக்கள் வாசலில் ஆர்பரித்து ஆரவாரித்து மேள தாளத்துடன் பூரிபூடன் விடுதலைப் போராளிகளை வரவேற்றார்கள் அப்படி அரசியல் பணியும் … கடற்புலி அரசியற் பிரிவும் இன்னும் விடுதலை விழிர்புனர்வுகளும் பல கட்டமாக முன்னெடுத்து காலம் நகர்ந்தது…. அன்று ஒரு நாள் குடிபோதையில் இருவர் விதியில் கட்டி புரண்டு சண்டை பிடித்தனர் அது பின்பு குடும்பசண்டையாக மாறி நீண்டது சில போராளிகள் அவ்விதியால் செல்லுகையில் பார்த்து சண்டை ...

Read More »

ஊர் தந்த உயிர்ச்சத்து

அவன் கள நிலைகளுக்குச் சென்றால், நண்பர்கள் பகிடியாக கத்தரிக்காய் பொறுப்பாளர் எனச்சொல்லி வரவேற்பார்கள். வேதனை கலந்த புன்னகையை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவனுக்கு. அவர்களும்தான் என்ன செய்வார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் கத்தரிகாயைச் சாப்பிடுவது. நாளுக்கு ஒரு வேளையென்றால் கூட பரவாயில்லை. மூன்றுவேளை உணவுடனும் கத்தரிக்காய் உறவாடியது. ஆனால் அந்த நாட்களில் உணவுக்கு கத்தரிக்காயும் கிடைக்காமலிருந்தால்….அவனால் அதற்குமேல் சிந்திக்க முடியவில்லை. ஓயாத அலை மூன்றினால் அந்த ஊரின் பெரும்பகுதி இராணுவ ...

Read More »

கடற்சமரில் ஓர் தளபதியின் தெரிவு ….

ஒரு நாட்டின் எல்லை என தரையில் இருப்பது வழமை, அப்படியாக கடலில் ஆழம் தெரியாதது போல் கடலும் பரந்து நீண்டு கிடக்கிறது… ஒரு நாட்டின் கடற்பரப்பு சராசரி 300 கடல்மைல் (NM) தரையில் ( 3.0 × 10-10 கிலோ மிற்றர் ) கொண்டதாக அமையும் ஆனால் தமிழீழத்தில் 25 கடல்மைல் கொண்டதாக இருந்தது. அது கடற்புலிகளுக்கு ஓயாத அலைகள் வென்றது முதல் கட்டுப்பாட்டுக்குள் சிங்களவன் பிடிதன்னில் இருந்து மீட்ட ...

Read More »

தண்டனையில் எனக்கும் பங்கு….

விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்… எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை…. பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது ...

Read More »