Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / கேணல் சங்கீதன்

கேணல் சங்கீதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் பொறுப்பாளருமான கேணல் சங்கீதன் அண்ணா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்…!

தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேவை உணர்ந்து திருநாவுக்கரசு அன்பழகன் என்னும் இயற்பெயர் கொண்டு 1990 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து “அதிரடி-14 பயிற்சிப் பாசறையில் சிறப்புப் இராணுவப் பயிற்சிகளை திறமையாகச் செய்து முடித்த சங்கீதன் அவர்கள் போராட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்.அமைப்பு இவருக்கு இட்ட பெயர் சங்கீதன்.

இவர் இயல்பாகவே சுறுசுறுப்பும்,குறும்புக் குழப்படிகள் உள்ள ஒரு போராளி.ஆனால் எந்நேரமும் கடமை தவறாத கண்ணியமுள்ள ஒரு போராளி.சக போராளிகளோடு அன்பாகப் பழகக் கூடியவர்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வாக இருக்க மாட்டார்.
சக போராளிகளை அழைத்து ஏதாவது குறும்பு வேலைகளில் ஈடுபடுத்தி தன்னையும்,பிறரையும் ஆளுமையுள்ளவர்களாக வளர்க்க முயற்சி எடுப்பார்.
சாண்டோ சாகச சாதனைகள் செய்து பழகுவார்.கையில் மோட்டார் சைக்கிள் ஏற்றுவார்,கிடங்கில் இருந்து கொண்டு மேலே நெருப்பு எரிப்பார்,நெஞ்சில் பாரம் தூக்கி அடிப்பார் இப்படியான சாதனைகள் செய்து பிறரை வியக்க வைப்பார்.

இவரின் போராட்ட ஆளுமை உணர்ந்த தலைமை புலனாய்வுப் பிரிவுக் கட்டமைப்புக்கு இவரை உள்வாங்கியது.
உள்வாங்கப்பட்டு சிறிது கால இடைவெளியிலே புலனாய்வு முன்நகர்வு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்து தன்னுடைய பங்களிப்பை திறம்பட ஆற்றியவர்.இவரின் ஆளுமை மிக்க போராட்ட திறண் 1993-1994 இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாக பொட்டு அம்மானால் நியமிக்கப்பட்டார்.

சங்கீதன் அண்ணாவின் பங்கு விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு பெரிதும் முக்கியத்துவம் வகித்தது. சிங்கள உயர் மட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் இரகசிய புலனாய்வு உறுப்பினர்கள் இவராலேயே சிறப்பு கல்வி வழங்கப்பட்டு இவரின் மறுபரிசீலனை அடிப்படையிலேயே அணி நகர்த்தப்படும்.மறைமுகக் கரும்புலிகளால் நடத்தப்பட்ட பல நடவடிக்கைகள் இவரின் வழிநடத்தலிலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

“கல்வி”

கல்வி அறிவு நிறையவே இவரிடம் இருந்தது.தன்னைப் போல மற்ற போராளிகளையும் ஆளுமையுள்ளவர்களாக உருவாக்கத் துடித்தவர்.இவரிடம் கல்வி கற்று திறமையான மனிதர்களாக வெளியேறியவர்கள் பலர் இன்றும் உள்ளனர்.எழுதும் ஆர்வம் கொண்டவர்.
புத்தகங்கள் எழுதி போராட்டத்துக்குள் கல்வி அறிவை உள்நுழைத்தவர்.

விளையாட்டுத் துறை,கராத்தே,சிலம்படி போன்ற தனித்திறமைகள் இவரிடம் உண்டு.

ஓயாத அலைகள்-03 நடவடிக்கையில்புலனாய்வு அணியினரின் நகர்வை நேரடியாகக் களத்திலே நின்று நெறிப்படுத்தி தாக்குதல் வெற்றிக்கு வழியமைத்தவர்.இந்த நடவடிக்கையில் பாரிய விழுப்புண் அடைந்து வலது கை செயற்பாடு இழந்து காணப்பட்டது.அந்த நேரத்திலும் கூட சற்றும் சோர்வடையாது விடுதலைப் பணி தொடர்ந்தவர்.குறிப்பிட்ட நாட்களிலேயே இடது கையை வளப்படுத்தி எடுத்தவர்.இடது கையாலே எழுதவும் பழகிக்கொண்டவர்.

போராட்டத்தின் தேவை உணர்ந்து எல்லா விதமான அடிப்படை வளவசதிகளையும் சரியாகப் பயன்படுத்தியவர்.இவரின் ஆளுமை உணர்ந்து தலைமை இவரின் மேல் நம்பிக்கை வைத்து இவரைச் சரியாகப் பயன்படுத்தியது.

தான் சார்ந்திருந்த புலனாய்வுத்துறையில் பல போராளிகளை ஆளுமையுள்ளவர்களாக உருவாக்கிய பெருமை சங்கீதன் அண்ணாவுக்கே சேரும்.எதிரியின் அதியுச்ச இடங்களுக்கு பல தாக்குதல்களை முன்னெடுப்பதற்கென 2-7 என்ற முகாமை தானே உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கி பல மறைமுக தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியவர்.

தமிழீழத் தேசியத் தலைவரையும்,அவரது உயர்ந்த புனிதமான கொள்கைகளையும் உளமார ஏற்று போராட்டப் பாதையில் அயராது உழைத்த மாவீரன்.போராளிகள் எல்லோரிடமும் வயது எல்லை பாராது நட்போடு அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர்.கடமை நேரங்களில் மிகவும் இறுக்கமாக இருந்தாலும் பின்பு அவற்றை சமாளித்து பண்பாக போராளிகளை வழிநடத்திய ஆசாண்.இந்த அற்புதமான மகத்தான மாவீரன் இன்று எம்முடன் இல்லை.ஆனால் இவரால் நல்ல ஆளுமையாகவும்,அறிவுள்ள,பண்புள்ள போராளிகளாகவும் உருவாக்கப்பட்ட பலர் இன்று உலகெங்கும் பரந்து உள்ளீர்கள்.

இந்த மாவீரனின் உன்னதமான கனவை நனவாக்க நிச்சயம் போராட்டப் பாதையை ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வது நாம் அவருக்குச் செய்யும் வீர அஞ்சலி ஆகும்.

சங்கீதன் அண்ணாவின் இழப்பு சாதாரணமான ஒரு சாவு அல்ல.இது ஒரு சரித்திர நிகழ்வு.வீரச்சாவு அடைவதற்கு 30 நிமிடங்கள் முன் கூட அவரின் விடுதலை உணர்வு சற்றும் தளரவில்லை.தலைவனைப் போன்று தன்னையோ தன் சார்ந்தவர்களையோ பாராது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விடுதலையையே ஆழமாக நேசித்த மாவீரன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டமைப்பில் தவறிழைக்கும் போராளிகளை விசாரணை செய்து அவர்களை மீள்சீரமைத்து அவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை வழங்கி அமைப்பின் வளர்ச்சிக்கு வழியமைத்த உத்தமன்.
இவரின் அதிரடியான திறமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.சமாதான காலப்பகுதியில் சிங்கள சிவில் உயர்மட்ட அதிகாரியால் தயார் செய்யப்பட்ட உளவாளி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உளவுக் கடமையில் ஈடுபட்டு வந்தான்.

இவரின் திறமையால் தன் சக போராளிகளைசிங்கள இராணுவ உடை அணிவித்து இராணுவ சூணியப் பிரதேசத்திற்கு அனுப்பி அந்த உளவாளியின் தகவல்களை பெறுவது மாதிரி நடித்து 3 நாட்களில் அந்த உளவாளியைக் கையும் மெய்யுமாகக் கைது செய்து போராட்ட இரகசியம் காத்த ஆசாண்.

எதிரி இவர் போட்ட முடிச்சுக்களை அவிழ்க்க முடியாது இன்றும் திண்டாடுகிறான்.உங்கள் வீரச்சாவு நிகழ்வை எதிரியும் நினைவு கூறுவான். அந்தளவுக்கு புலனாய்வின் இரகசியம் காத்த உன்னதவீரன்.

“குடும்ப வாழ்க்கை”

தலைமையால் எதிர்கால திட்டம் கருதி குடும்ப வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்.மனைவிக்கு அன்பான கணவராகவும்,பிள்ளைக்கு அன்பான அப்பாவாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியான குடும்பத் தலைவனாகத் திகழ்ந்தவர்.இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சார்ந்தவர்கள் இந்த மகத்தான மாவீரனை நினைத்துப் பெருமைப்பட வேண்டியவர்கள்.

இழப்புக்கள் இல்லாது இன விடுதலையை பெற்று விட முடியாது.உலக சமூகம் இவர்களது இறப்பையும் ஒரு நாள் உணரும் காலம் வரும்.சங்கீதன் அண்ணாவின் உன்னத இலட்சியக் கனவை முழு வீச்சாகக் கொண்டு எம் இன விடுதலைக்காக தொடர்ந்து பயணிப்போம் என்று இவரது ஆத்மாவிலும் ஏனைய ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லறைகளிலும் சத்தியம் செய்து உறுதியோடு பயணிப்போம்.

“வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்”

நன்றி
வரலாற்றுப் பதிவிற்காக
“ராஜ் ஈழம்”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

About ehouse

Check Also

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் ...

Leave a Reply