எமது புரட்சிகரத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இளமைக் காலத்தில் உற்ற உறவுகளை மறந்து ஒரு சராசரி மாந்தன் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் துறந்து தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றினாலும் அரசியல், சமூக அக்கறையினாலும் பெண் விடுதலை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண் போராளிகள் எமது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, அவரின் தலைமையினையும் வழிகாட்டல்களையும் உளமார ஏற்றுப் போராடி தம்முயிரீந்து மாவீரர்களாகியுள்ளார்கள். அவ்வாறே லெப்ரினன்ட் சாந்தாவும் சிறீலங்கா இராணுவத்தினரின் கொடும் ஒடுக்குமுறைகளாலும், திட்டமிடப்பட்ட இனவழிப்பினாலும் தனது குடும்பமும் மக்களும் இன்னலடைவதைக் கண்டு அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தமிழீழப் பெண் போராளியாக இணைந்து எம் தலைவன் காட்டிய திசையில் விடுதலைப் பற்றுடன் களமாடி, தமிழீழ மண்ணுக்காய் தனையீந்து மாவீரராகினார்.
Read More »அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா
நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த ...
Read More »லெப்ரினன்ட் புகழினி
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் ...
Read More »கப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்
யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கலைமதியாக இவர் பல வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கலைமதியின் உறவினர்கள் அன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊர்களினுள் இருந்தமையால் உறவினர்களுக்கு வீரமரண செய்தி அறிவிக்கப்படாமல் தமிழீழ மாவீரர் பணிமனை கிளிநொச்சி கோட்டத்தின் ஊடாக இறுதி ...
Read More »தமிழீழ தேச மீட்புப் போராட்டத்தில் மாவீரர் கரிகாலன்
எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை ...
Read More »லெப்ரினன்ட் மிருணா / முல்லையரசி
எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா. ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக ...
Read More »கப்டன் சுடரொளி
வட தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னித் தலை நிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையிலே மொட்டைக் கறுப்பன்,பச்சைப் பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் விளையும் விவசாயப் பூமியும் எத்தனையோ மாவீரர்களையும் கரும்புலி வீரர்களையும் நாட்டுக்கீந்த வீரப்பூமியுமான பூநகரி எனும் ஊரிலே ஐந்து அக்காக்கள்,மூன்று அண்ணாக்கள் கொண்ட மிகப் பெரிய அழகான குடும்பத்திலே திரு.திருமதி கந்தர் தம்பதியினருக்கு கடைசிப் புதல்வியாக 09.04.1974 இல் ஞானசகுந்தலா அக்கா பிறந்தார்.அவர்களது குடும்பமானது ...
Read More »லெப்.கேணல் வரதா / ஆதி
தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் ...
Read More »மேஜர் சேரலாதன்
வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு “அன்பகம்” எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு ...
Read More »மாவீரர் நிசாம் / சேரன்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடி 2009 மே18 இற்கு பிறகு மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்ட வரலாறு அளப்பரிய தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் கொண்டது.எமது மாவீரச் செல்வங்கள் வியப்புமிக்க மகத்தான வீரகாவியங்களைப் படைத்தனர்.அந்த மகத்தான மாவீரர்களின் இலட்சிய வெறி கொண்ட இரத்தத்தினால் எழுதப்பட்டது தான் எமது வீரம் செறிந்த போராட்ட வரலாறு.அவர்கள் தமது மக்களுக்காகவே இரத்தம் சிந்தினார்கள்,மக்களுக்காகவே மடிந்தும் போனார்கள்.மக்கள் என்ற புனித ஆலயத்திற்கு தமது உயிர்களை காணிக்கையாக ...
Read More »