Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / லெப்.கேணல் கமலினி

லெப்.கேணல் கமலினி

மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி பங்குனி மாதம் 15 திகதி 2009 வீரச்சாவு ! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவில் இணைந்து மருத்துவ கல்வி கற்று மருத்துவர் ஆனார்.

மக்களுக்கான மருத்துவ பணிகளில் இவர் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டார்.

நான்காம் ஈழப் போரில் மடு தொடங்கி சகல பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவையினை போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி செய்து வந்தார்.

 

About ehouse

Check Also

மாவீரர் தவபாலன்

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி ...

Leave a Reply