எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை ...
Read More »கப்டன் கலைமதி
அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt)கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை(first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது. கலைமதி அக்காவும் எல்லோரும் ...
Read More »லெப்ரினன்ட் மிருணா / முல்லையரசி
எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா. ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக ...
Read More »சிறந்த தளபதி கேணல் துரோணர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் ...
Read More »சூரியப் புதல்வன் – ஒரு மறைமுகப் போராளியின் வீரப் பாதங்களின் சுவடு.!!
விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான ...
Read More »லெப் மணி
இரணைஇலுப்பைக்குள முன்னரண் இராணுவத்தினரின் ரோந்து அணி மீதான தாக்குதல் ஒன்றுக்காக விசேட படையணியில் ஒருவனாக முட்களும் காய்ந்த காட்டுப்பற்றைகள் ஊடான நகர்வு. கடுமையான களைப்பு குறைந்தளவான உணவும் நீரும். ஆனாலும் அவனது முகத்தில் மலர்ச்சி. அந்தக் களைப்பிலும் தனது பொக்கற்றிலிருந்த சீப்பை எடுத்து, தலைவாரி அடுத்த கட்ட நகர்வுக்கான பயணம். . 22 – 07 – 2000, அதிகாலை வரவேண்டிய இராணுவத்தை குறிவைத்த அந்த தாக்குதல். எதிர்பார்த்ததிலும் அதிக ...
Read More »லெப் கேணல் எழிற்கண்ணன்
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவனுடையதுதான். மிராஜ் வகைப் படகுகள் கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரேதடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப்பார்க்கும்படி கூறியிருந்தார்.முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப்பார்த்து ஓடிய எழிற்கண்ணன் ஒரேதடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க ...
Read More »லெப் கேணல் பார்த்தீபன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ மரபுப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் முக்கிய தளபதியும்,கவச வாகனப் பொறுப்பாளருமான லெப் கேணல் பார்த்தீபன் அவர்களின் வீரவரலாற்று நினைவுகள்…! “நடராஜா மகேஸ்வரன்” [திருநெல்வெலி யாழ்ப்பாணம்] வீரப்பிறப்பு-1972-10-09 வீரச்சாவு -2006-08-13 தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் பூர்வீக இருப்பிடமாகக் கொண்ட இவரது குடும்பம் பதின்மூன்று சகோதரர்களைக் கொண்டவன் தான் மகேஸ்வரனான பார்த்தீபன்.பத்தாவது புதல்வனான இவன் குகா என்று வீட்டில் செல்லமாக ...
Read More »விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் ...
Read More »புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்கவேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை ...
Read More »