Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப் கேணல் தியாகராஜன்/காவலன்

லெப் கேணல் தியாகராஜன்/காவலன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான லெப் கேணல் தியாகராஜன்/காவலன் அவர்களின் வரலாற்று நினைவுகள்…!

“விடுதலைப் பாதையில் புலனாய்வுப் புலியாய் போராடி புலனாய்வின் இரகசியம் காத்து தன்னைத் தானே அழித்து வீரகாவியமான போராளி”

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெரும்பாலான முக்கிய நடவடிக்கைகளில் பங்காற்றிய போராளி.
ரணில் அரசுடன் மேற்கொள்ளபட்ட சமாதான உடன்படிக்கையின் ஏற்பட்ட அமைதி காலத்தில் லெப் கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயல்பட்டவர்.அரசியல் செயல்திட்டங்களுடன் தனது வேவு பணிகளையும் அங்கு திறம்பட செய்துகொண்டிருந்தார்.

குறிப்பாக விடுதலை போராட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறிலங்கா துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இவர் தனது வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார்.தனது நடவடிக்கைகளுக்காக இவர் அதிகமாக கரவெட்டி நெல்லியடி பகுதிகளில்தான் நிலைகொண்டிருந்து செயற்பட்டு கொண்டிருந்தார்.

இப் பிரதேசத்தின் பகுதிகள் இவருக்கு அத்துபடியாக தெரிந்திருந்தன.பின்னர் வன்னி திரும்பியிருந்த தியாகராஜன்,போர் இடம்பெர்ருகொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் படையினர் மீது தாக்குதல் நடவடிக்கைகளுக்ககவும் புலனாய்வு செயல்படுகளுக்காகவும் யாழில் தனது அணியுடன் சென்று தரையிறன்கியிருந்தார்.

எழில் சற்று தொய்வடைந்திருந்த தாக்குதல்கள் தியாகராஜனின் வருகைக்கு பின்னர் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கின மீண்டும் சிறிலங்கா படையினரின் முகாம்கள் ஊர்திகள் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன.

நான்தொரும் படையினர் மீது அங்கங்கு தாக்குதல் இங்கு தாக்குதல் என வெளிவந்த செய்திகளுக்கு பின்னால் தியகரயனின் கைவரிசை இருந்தது.அதிகரித்த இந்த தாக்குதல்களால் திக்குமுக்காடிய சிறிலங்கா படையினர் தங்களை பாதுகாக்க ( e,p d,p ) உட்பட தமது துணை இராணுவ குழுக்களை களத்தில் இறக்கினார்கள்.

சிறிலங்கா துணை இராணுவ ஒட்டு குழுக்கள் விடுதலை புலிகளிக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதுபவர்களையும் படுகொலை செய்யவும் கடத்தவும் கையது செய்யவும் அச்சுறுத்த தொடங்கினார்கள்,நாளும் படுகொலை கடத்தல்கள் என்னும் அளவிற்கு இது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது.குடும்பமாகவும் பலர் இந்த படுகொலைக்கு பலியானார்கள்.

ஒட்டுகுழுக்களின் இந்தனடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட தொடங்கியது.இராணுவ நகர்வுகள் தொடர்பாக மக்கள் விடுதலைபுலிகளின் புலனாய்வலர்களுக்கு வழங்கிய தகவல்களும் இதனால் குறைவடைய தொடங்கின.இதனால் புலனாய்வு போராளிகள் களத்தில் இரங்கி தகவல்களை சேகரிக்கவும்.

நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய தேவை எழுந்தது.வேவு நடவடிக்கைகளை மக்களோடு மக்களாக இணைந்திருந்தே மேற்கொள்ளவேண்டிய நிலையில் படையினர் ஓட்டுகுளுவினரினால் அடையலாம் காணப்பட்டு போராளிகள் இழப்பை சந்திக்க தொடங்கினார்கள்.

மேயர் புவியரசன் நெல்லியடி கொறவத்தை என்னும் இடத்தில் வைத்து சிறிலங்கா படையினரால் சுட்டு கொல்லபடுகிறார் . மேஜர் கவியரசன் கப்டன் வினோத் ஆகிய போராளிகளும் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களில் வீரச்சாவு அடைகின்றார்கள் இவ்வாறு போராளிகளின் இழப்புக்களால் யாழில் நடவடிக்கைகள் மீண்டும் மந்த நிலைய அடைகிறது.

இந்த நிலையில் தாக்குதல் நடவடிக்கைகளை விட வேவு தரவுகளே அப்போதைய நிலையில் அவசியமாக கருதப்பட்டதால் தாக்குதல் நடவடிக்கைகளை தியாகராஜன் கைவிட்டு என்சியிருந்த தனது ஒருசில போராளிகளுடன் வேவு நடவடிக்கையில் இறங்குகின்றார்.

மக்களோடு மக்களாக வாழ்ந்து வேவு தரவுகளை சேகரிக்கிறார்.அத்துடன் சிறிலங்கா படை அதிகாரிகள் தங்கியிருக்கும் முகாம்கள் கனரக ஆயுத வெடிபொருள் களஞ்சியம் படைமுகாம் ஆட்டிலறி தளங்கள் என்பவற்றை தனது வேவு நடவடிக்கைகள் முலம் அடையலாம் கண்டு போருப்பனவர்களுக்கு தகவல்களை வழங்குகின்றார்.

யால்குடவிற்கு மேலும் அதிகளவான வேவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அடுத்த கட்டமாக விடுதலை புலிகளின் கடற்புலிகளின் வேவு படையணிகள் தரையிறக்க படுகின்றன.தீவு பகுதிகள் உடாகவும் மற்றும் பருத்தித்துறை பகுதி உடாகவும் யாழ்ப்பாணத்தின் கடல் வழியாக தரையிறங்கிய அவர்கள் ஆங்கங்கே நடவடிக்கைகளில் ஈடுபட்கின்றார்கள்.

இதன்போது புலனாய்வு துறை அணியின் போராளி ஒருவர் சிறிலங்கா படையினருக்கு எதிரான நடவடிக்கைக்காக தன்னை தயார்படுத்தி செல்லும் வேளை படையினரின் சுற்றிவளைப்புக்குள் அகபட்டு சயனேட் அருந்துவதற்கு கூட அவகாசம் இல்லாத அளவிற்கு உயிருடன் பிடிபடுகிறார்.

கடுமையான சித்திரவதை விசாரணைகளால் இவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் வைத்திருக்கும் இடங்களையும் சில ஆதரவலர்களையும் படையினர் இனம்கண்டு கொள்கிறார்கள்.இது யாழ் குடாவிற்கான நடவடிக்கையில் ஒரு இக்கட்டான நிலைய ஏற்படுத்துகிறது.இதனால் அடுத்தகட்ட முடிவொன்றை விடுதலை புலிகள் அவசரமாக எடுகின்றார்கள்.

அதாவது படையினரிடம் எதிர்பாராமல் அகபட்டு கொண்டால் விடுதலைபுலிகளின் கொள்கைக்கு அமைய சயனேட் அருந்துவதற்கு பதிலாக குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவை தழுவி கொள்ளுவதும் இதன்முலம் தானும் இழப்பதுடன் எதிரிக்கும் இழப்புக்களை ஏற்படுத்த முடியும்.குப்பிய கடித்து வீரச்சாவை தழுவினாலும் இதனால் மேலும் சில நெருக்கடிகள் இருந்தன.

குப்பிய கடித்து வீரச்சாவை தழுவும் போராளிகளிடம் இருக்கும் சில தடையங்கள் சில தரவுகளை வைத்துகொண்டு ஆதரவலர்களையும் இனம்கண்டு கொள்கின்ற,விடுதலைபுலிகளின் அடுத்தகட்ட செயற்பாடு குறித்து ஆராய்கின்ற நடவடிக்கையில் சிறிலங்கா பரையினர் ஈடுபட்ட நிகழ்வுகளும் நடந்தேறின.

இதனால் யாழ்குடாவில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்கென உடலோடு பொருத்தப்படும் யக்கட் ( வெடிகுண்டு )புதிதாக வடிவமைக்க படுகின்றது.அத்துடன் யாழ்ப்பாணத்தில் நிற்கும் அனைத்து போராளிகளுக்கும் இது தொடர்பாக புலனாய்வுத்துறையின் தலைமை பிடத்தால் கட்டளையும் வழங்க படுகிறது.

எக்காரணம் கொண்டும் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட குடாது.உங்களை அளித்துகொள்ளவேண்டிய அவசியம் எழுந்தால் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இரண்டு எதிரியையவது அளிக்கவேண்டும்.என்று அவர்களுக்கு கட்டளை வழங்க படுகிறது.இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற புதிதாக செல்லும் அனைத்து போராளிகளுக்கும் யக்கட் வழங்க படுகின்றது.

இவ்வாறு இறுக்கமான காலகட்டத்தில் இறுக்கமான நிலையில்தான் புலனாய்வு போராளிகளின் செயல்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் கரவெட்டி அரசடி பகுதியில் தியாகரஜனை அடையலாம் கண்டுகொண்ட சிறிலங்கா படையுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் அவர் மீது துப்பாக்கி சுடு நடத்துகின்றார்கள்.இதன்போது லெப் கேணல் தியகரஜ்கன் வீரச்சாவை தலுவிகொள்ளுகிறார்.

இதேவேளை போராளிகள் இருக்கும் இடமொன்றை அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் மிக இரகசியமாக அப்பகுதிய சுற்றிவளைத்து அவர்களை உயிருடன் கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இதன்போது நிலமைய உணர்ந்துகொண்ட போராளிகள் பொறுமையோடு தமது இலக்குக்குள் படையினர் வரும்வரை காத்திருந்து.தங்களிடம் இருந்த குண்டுகளை வெடிக்கவைத்து தங்களை தாங்களே அளித்ததுடன் கையது செய்யவந்த படையினர் சிலரையும் உயிரிழக்க வைக்கிறார்கள்.

தங்களையும் அளித்து தங்களிடம் இருந்த வெடிபொருட்கள் வேவு தரவுகளையும் அளித்து எதிரிக்கு அழிவை ஏற்படுத்தி இந்த மண்ணிற்கான அற்புதமான தியாகத்தை புரிந்துகொண்டார்கள் அந்த போராளிகள்.இதே வேளை படையினரிடம் அகப்படும் நிலையில் அவர்கள் முன்கட்டியிருந்த யாக்கட் குண்டினை வெடிக்கவைத்து வீரச்சாவு அடையும் சம்பவங்களும் இதனால் படையினர் இழப்புக்களை சந்திக்கும் சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கின.இவர் சிறிலங்கா படையினர் மத்தியில் அதிர்சியையும் அச்சத்தையும் புதிய பல சிக்கல்களையும் ஏற்படுத்தி இருந்தது.

தங்களையும் அளித்து எதிரிக்கும் அழிவை ஏற்படுத்தும் அணிபோன்று யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த போராளிகள் செயற்பட்டுகொண்டிருந்தது. சந்தேகத்தின் பெயரில் ஒருவரை படையினர் கைது செய்வதற்கு அஞ்சுகின்ற அளவிற்கு நிலமையை கொண்டு சென்றிருந்தனர் புலனாய்வுத்துறையினர்.

லெப் கேணல் தியாகராஜன் விடுதலைப்புலிகளின் புலனாய்த்துறையின் தளபதிகளில் ஒருவர் இலங்கை இராணுவத்தினருடன் நேரடி மோதலின் போது புலனாய்வுத்துறையின் ரகசியத்தை காப்பாற்ற இராணுவ சுற்றிவளைப்பின் போது தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு வீரச்சாவடைந்தார்.
காவலன் அண்ணா உங்கள் இலட்சியப் பாதையில் வழிதவறாது பயணம் தொடர்வோம்.
நன்றி

[ராஜ் ஈழம்]
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply