Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / வெளியில் தெரியாத ஆணிவேர் சுயாகி அண்ணா

வெளியில் தெரியாத ஆணிவேர் சுயாகி அண்ணா

சுயாகி அண்ணை என்றால் போராட்டத்துடன் அறியப்படாத ஒரு பெயர் ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவன் என தலைவரால் பாராட்டப்பட்டவன் விடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவனே. வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன்.

ஆரம்பத்தில் மணலாற்றுக் காடுகளில் தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன்.அண்ணனின் நம்பிக்கைக்குரிய இரகசியக் காப்பாளன். அதனால்தான் 23வருடங்கள் போராட்ட வாழ்வும் தலைமையின் நேரடி வழிகாட்டலில் கடமையை செய்யும் பாக்கியம் கிடைத்தது. தன் பணியில் மிகவும் கண்ணியமுடையவன். திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை இவன். இவனது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி மற்றும் பழவகைகளுக்குக் குறைவிருக்காது. எங்கு சென்றாலும் தன் வீட்டுப் பழவகை, காய்கறிகள் கொண்டு சென்று கொடுப்பது இவனது இயல்பு. இவனுடைய பணி மிகவும் கடினமானது.

போராளிகளை இவனது அன்பான வழி நடத்தலால் அப்பணிக்கு சுலபமாக்கியவன். அனைவரையும் மதித்து நடக்கும் ஒரு பண்பாளன்.இறுதி முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவன் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவன். [சிங்களப்படைகளால் வெளியிடப்பட்ட ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த புலிகளின் விபரத்தில் கேணல் சுயாகி என பதியப்பட்டுள்ளது. அதைபோன்று ஈழ ஆதரவு இணையங்களிலும் ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்ததாகவே பல பதிவுகள் உள்ளது அது தவறு சுயாகி அண்ணா மே 18 2009 வரை முள்ளிவாய்க்கால் களத்தில் நின்றவர்]

குறிப்பு: மேலே பதியப்பட்ட பதிவு இணையங்களில் இருந்தது சுயாகி அண்ணா தொடர்பாக சில முரணான விடயங்கள் இருந்தன அவற்றை நீக்கி இந்த பதிவை தந்துள்ளேன். சுயாகி அண்ணா தொடர்பான முழுமையான பதிவு விரைவில் என்னால் பதியப்படும்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply